Asianet News TamilAsianet News Tamil

சசிகலா வூட்டு சமையல்காரர் பெயர்ல 300 கோடி! டிரைவர் பெயர்ல 500 கோடி: பதுக்கலில் பி.ஹெச்.டி. முடிச்ச மன்னார்குடி கோஷ்டி

ஜெயலலிதாவை விஞ்சிவிடுவார் போல சசி! ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட தமிழக அரசியல் எப்போதும் தன்னை சுற்றியே வட்டமடிப்பது போல் பார்த்துக் கொள்வார் ஜெ., அவர் மறைந்துவிட்டார். இந்நிலையில், நான்காண்டு சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைபட்டிருக்கிறார் சசி. ஆனால் தமிழக அரசியல் பரபரப்புகள் என்னவோ அவரை மையப்படுத்தியேதான் அடிக்கடி புயலடிக்கின்றன. 

300 crore in sasi's cook name
Author
Tamil Nadu, First Published Nov 9, 2019, 4:13 PM IST

ஜெயலலிதாவை விஞ்சிவிடுவார் போல சசி! ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட தமிழக அரசியல் எப்போதும் தன்னை சுற்றியே வட்டமடிப்பது போல் பார்த்துக் கொள்வார் ஜெ., அவர் மறைந்துவிட்டார். இந்நிலையில், நான்காண்டு சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைபட்டிருக்கிறார் சசி. ஆனால் தமிழக அரசியல் பரபரப்புகள் என்னவோ அவரை மையப்படுத்தியேதான் அடிக்கடி புயலடிக்கின்றன. பல நேரங்களில் டெல்லி அரசியலும் சசியை ரெஃபர் செய்வதுதான் ஆச்சரியம் பிளஸ் அதிர்ச்சி. அந்த வகையில், கடந்த சில நாட்களாக ‘சசி விரைவில் சிறையை விட்டு வெளியே வருவார். மீண்டும் அ.தி.மு.க.வின் தலைமை பீடத்தில் அமர்வார்’ என்று ஒரு ஜோஸியம் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவோ ’சசி மீது வெளியே வர முடியாத அளவுக்கு அடுத்தடுத்து வழக்கு பாய இருக்கிறது.’ என்கிறார்கள். 

300 crore in sasi's cook name
இதற்கான ஒத்திகையாகவே அவரது  குடும்பத்தினர் நடத்தி வரும் போலி நிறுவனங்களில் ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாய் சொத்துக்கள் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்ட விவகாரத்தை குறிப்பிடுகிறார்கள். அதாவது சில மாதங்களுக்கு முன் போயஸ்கார்டன், கொடநாடு உள்ளிட்ட ஜெ மற்றும் சசி வளைய வந்த சொத்துக்களில் சுமார் ஒரு வாரத்துக்கும் மேல் ரெய்டு நடத்தப்பட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள், பத்திரங்கள், சொத்து ஆவணங்கள், கம்பெனி முதலீடுகள் ஆகியவற்றை இதில் கண்டறிந்தது வருமான வரித்துறை. 
இத்தனை நாட்களாக அவற்றை ஆராய்ந்து பார்த்துத்தான் சுமார் ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாய் மதிப்பிலான சசி டீமின் சொத்துக்களை முடக்கியுள்ளனர். இந்த சொத்துக்களை எப்படி மெயிண்டெயின் செய்தனர்? என்று வருமான வரித்துறையின் தரப்பில் கேட்டபோது அவர்கள் சொல்லிய விளக்கம் அதிர வைக்கிறது. அதாவது சசிகலா மற்றும் அவரது உறவுகளின் வீடுகளில் டிரைவர்கள்,  தோட்டக்காரர், சமையல்காரர்களாக வேலை பார்த்த சுமார் இருபத்தைந்து பேரின் பெயரில்தான் இதில் பல்லாயிரம் கோடி ரூபாய் டெபாசீட் செய்யப்பட்டு இருந்தததாம். 

300 crore in sasi's cook name
எப்படி இப்படி? என்று பார்த்தபோது...அந்த நபர்களின் ஆதார் அட்டையை வாங்கி அதை வைத்து அவர்களின் பெயரில் வங்கியில் கணக்கு துவங்கியுள்ளனர். பின் அதில் தங்கள் வசமிருந்த கோடிகளை டெபாசீட் செய்துள்ளனர். சமையல்காரர் பெயரில் முந்நூறு கோடி, பால்காரர் பெயரில் ஐநூறு கோடின்னு போட்டிருக்கிறாங்க. இதுல கொடுமை என்னான்னா, அந்த ஆளுங்களுக்கு தங்களோட பெயர்ல இத்தனை நூறு கோடிகள் இருக்குதுன்னு எதுவும் தெரியாது. தன்னோட அக்கவுண்ட்ல பல்லாயிரம் கோடிகள் இருக்குறது தெரியாமல் அன்றாடம் காய்ச்சிகளாகவே அவங்க இருந்திருக்காங்க. விசாரனையின் போது இதை இதை நாங்க சொன்னப்ப  அந்த அப்பாவிகளுக்கு பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு. பாவம் உண்மையிலேயே அவங்களுக்கு எதுவும் தெரியலை. அக்கவுண்ட் ஆரம்பிக்க கையெழுத்து தேவைப்பட்டப்ப, ‘உங்க பெயர்ல இன்சூரன்ஸ் எடுக்கணும்’ன்னு சொல்லி கையெழுத்து வாங்கினாங்களாம். எவ்வளவு தெளிவா இருந்திருக்காங்க பாருங்க! பதுக்கலில் பி.ஹெச்.டி. முடிச்ச கோஷ்டிங்க மன்னார் குடி கோஷ்டி!” என்கிறார்கள். 
இருக்காதா பின்னே!

 

Follow Us:
Download App:
  • android
  • ios