உங்கள் வீடுகள்தான் அடுத்த தலைமுறை அலுவலகங்கள்… - NewsFast
NewsFast Logo

உங்கள் வீடுகள்தான் அடுத்த தலைமுறை அலுவலகங்கள்…

அலுவலக வேலை நேரம், அலுவலகச் சூழல்

1.. அலுவலக வேலை நேரம், அலுவலகச் சூழல் உள்ளிட்டவற்றில் பணியாளரின் விருப்பத்துக்கு முன்னுரிமை தருகின்றன. அதன்படி, அவசியமற்ற நாட்களில் தங்கள் பணியை வீட்டிலிருந்தபடியே செய்யவும் பணியாளர்களை அனுமதிக்கின்றன.

2.. இல்லத்திலிருந்தபடியே பணியாற்றுவதில் பெண் ஊழியர்களின் உழைப்புத் திறன் உயர்ந்து வருகிறது. இவர்கள் தவிர்த்து முதலீட்டு ஆலோசகர்கள், தொழில் முனைவோருக்கு இல்லத்து அலுவலகம் பெருமளவு கைகொடுக்கும்.

3… வெளியே அலுவலகத்துக்குச் சென்று வருவோரும், வீட்டின் உபரி நேரத்தில் அலுவலகப் பணிகளை விரைந்து முடிக்க இந்த அலுவலக அறை வெகுவாய் உதவும்.

4.. வீடு கட்டும்போதே அலுவலக அறையைத் திட்டமிடுபவர்கள், வாஸ்துவைப் பரிசீலிப்பதாக இருப்பின் வீட்டின் தெற்கு, மேற்கு மூலைகளைத் தவிர்க்கலாம். கட்டி முடித்த வீடெனில் உபரியான இரண்டாவது படுக்கையறை அலுவலக அறையாக மாற்றுவதற்கு உகந்தது.

5.. வீட்டு நூலகம், படிப்பறை எனப் பிற உபயோகங்களுமாக அந்த அறையின் பயன்களை அதிகரித்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு. ஒற்றைப் படுக்கையறை வீடெனில், அறையின் ஒரு பகுதியைச் சிறிய தடுப்பு அல்லது திரைச்சீலையால் மறைத்து அலுவலக உபயோகத்துக்குப் பயன்படுத்தலாம்.

6.. அதுவே, வெளி நபர்களைச் சந்திக்க வாய்ப்புள்ள அலுவலகப் பணி எனில், வரவேற்பறையின் ஒரு பகுதியைத் தடுத்துப் பயன்படுத்தலாம். இடமே இல்லை என்பவர்கள் அறையின் ஒரு மூலையை அல்லது வீட்டினுள் அமைந்த மாடிப்படிகளின் கீழே எனக் கிடைத்த இடங்களை ஒழுங்குசெய்து அலங்கரித்தால் போதும். இவை இல்லாது போனாலும், இருக்கும் அறையின் ஒரு பக்கச் சுவரை ஒட்டி நமக் கான இடத்தைப் பிரித்துக் கொள்ளலாம்.

7.. மேஜை, நாற்காலி, அலமாரி, போதிய வெளிச்சம் என எளிமையாக நமக்கான அறையை வடிவமைத்து விடலாம். இடத்துக்கு ஏற்ப, சுவரில் பொதிந்த அறைகள், உயர அலமாரிகள், அதிக எண்ணிக்கையிலான இழுப்பறைகள் ஆகியவை, அலுவலக உபயோகத்துக்கான பொருட்களை அதிக அளவில் வைத்துக்கொள்ள உதவும்.

8.. அடர்த்தியான, கவர்ச்சியான வெவ்வேறு வண்ணங்கள் புத்துணர்வு சேர்க்கும். அளவில் சிறிய அறையானாலும் தனித்தன்மைக்கே உரிய ரசனையும், கற்பனைக்கு ஈடுதரும் படைப்பும் இடத்துக்கு பிரமாண்டம் சேர்க்கும். பணிசுமையில் நெடுநேரம் அறைக்குள் உழல்பவருக்குக் களைப்பு அண்டாதிருக்கும்.

9.. எந்த அளவுக்கு இயற்கையான வெளிச்சம் அறைக்குள் ஊடுருவ முடிகிறதோ அந்த அளவுக்கு அறை உயிர்ப்புடன் இருக்கும். குறைந்தது ஒரு ஜன்னலேனும் பக்கவாட்டில் அமைந்திருந்தால், கணினியில் களைப்படையும் கண்கள் ஜன்னல் வழி தூரத்துப் பார்வையில் இளைப்பாற உதவும்.

10.. ஜன்னல் இல்லாது போனாலும் அறையில் இரண்டொரு பூந்தொட்டிகள் அல்லது செடிகளை வைத்து கண்ணுக்கு இதம் சேர்க்கலாம். அலுவலக பாணியில் சிறு எழுது பொருட்களானாலும் கைக்கெட்டும் இடத்தில் ஒழுங்குடன் அடுக்கி வைப்பது நல்லது.

11.. மேலும் மேஜை விளக்கு, கடிகாரம், நாட்காட்டி, முதன்மை கோப்புகளுக்கான இடம், வரைபடம் எனப் பணிக்கு அவசியமானவற்றை அவற்றுக்கான இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

12.. தச்சுப் பணியாளரைக் கொண்டு குறைந்த இடத்தில் நிறைவான வசதிகளை வழங்கும் மேசை, அலமாரிகளை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். அலுவலக கேபின் இடமளிக்காத குடும்பப் புகைப்படம், பரிசு பதக்கங்கள், சான்றிதழ்களையும் கொண்டு இல்ல

13.. அலுவலகத்தைச் சுவாரசியமாக்கலாம். அதே சமயம் அலுவலக உணர்வைச் சிதறடிக்கச் செய்யும் அலங்காரங்களைத் தவிர்க்க வேண்டும். அறையின் உள்ளலங்காரம் என்பது தனிப்பட்ட ரசனை மட்டுமல்லாது, உங்களது பணி பகுதி நேரமா, முழு நேரமா என்பதைப் பொறுத்தும், பணியாளர் ஆணா அல்லது பெண்ணா என்பதைப் பொறுத்தும் வேறுபடும்.

14.. நீங்கள் உங்களது இல்லத்து அலுவலக அறையிலிருந்து அடிக்கடி பணி நிமித்தம் வெளியார்களைச் சந்திப்பதாக இருப்பின், அளவில் சிறிதான அறை என்பது அவர்களின் கவனத்தைச் சிதறடிக்காது. அந்த வகையில் எடுத்த விஷயத்தைப் பேசி விரைவாக உங்கள் பணிக்குத் திரும்ப வாய்ப்பளிக்கும்.

15.. அறைக்கு ஈர்ப்பு சேர்க்க விளக்குகளால் அலங்கரிப்பது தவறில்லை. அதே சமயம் கணினித் திரை, எழுத்து வேலைகளுக்கு இடையே இந்த விளக்குகளின் வெவ்வேறு வெளிச்ச அடர்த்திகள் கண்களுக்குச் சோர்வளிக்கும்.

16.. வீட்டில் இருந்தாலும் அலுவலக உணர்வை அறைக்குக் கடத்த சில ஏற்பாடுகள் அவசியம். இதில் முதலாவது அலுவலக அறையை வீட்டின் நிகழ்வுகள், இரைச்சல்கள் பாதிக்காதிருக்க வேண்டும்.

17.. வீட்டினுள்ளேயே அலுவலக அறைக்கான வழி இருந்தாலும், மாற்றுத் திறப்பு ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். அன்றாடம் அந்த வழியை அலுவலகப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துவது, அலுவலக அலைவரிசைக்கு உதவும். வீட்டின் சகல மூலைகளுக்கும் வலம் வரக்கூடியவர்கள் குழந்தைகள்.

18.. அலுவலக அறையில் அவர்களுக்கு அதிக இடமளிப்பது, உங்களது பணிகளின் மும்முரத்தைச் சிதறடிக்கலாம். இதுவே வளர்ந்த குழந்தைகள் எனில் அவர்களின் படிப்பு சார்ந்த பணிகளுக்கு நிபந்தனைகளுடன் அலுவலக அறையைப் பகிர்ந்துகொள்ளலாம்.

19.. சில வீடுகளில் வளர்ப்புப் பிராணிகள் குழந்தைகளைவிட அதிகம் இடம் எடுத்துக்கொண்டு வலம் வரும். அவற்றை அறைக்குள் தவிர்ப்பது நல்லது. அறைக்குள் அவ்வப்போது விரும்பிய சில மாற்றங்களைச் செய்வது நல்லது.

20.. ஆனால், அவை உங்களது பணித் திறனைப் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

English Summary

Your vitukaltan offices next generation

NewsFast Logo