கணவருக்கு விபத்து என்று கேள்விப்பட்ட மனைவி அதிரிச்சியில் இறப்பு… - NewsFast
NewsFast Logo

கணவருக்கு விபத்து என்று கேள்விப்பட்ட மனைவி அதிரிச்சியில் இறப்பு…

வேதாரண்யம் அருகே சாலை விபத்தில் கணவருக்கு விபத்து ஏற்பட்டது என்றுக் கேள்விப்பட்ட மனைவிக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மருத்துவமனையில்

வேதாரண்யம் அருகே சாலை விபத்தில் கணவருக்கு விபத்து ஏற்பட்டது என்றுக் கேள்விப்பட்ட மனைவிக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவரும் உயிரிழந்தார்.

வாய்மேடு மேலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பண்டரிநாதன் (63). இவரது மனைவி செந்தமிழ்ச் செல்வி (58). நேற்று முன்தினம், கணவன், மனைவி இருவரும் வயலில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடைவீதிக்குச் செல்வதாகக் கூறி மிதிவண்டியில் சென்ற பண்டரிநாதன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில்
காயமடைந்தார்.

இந்த தகவலை அறிந்த செந்தமிழ்ச் செல்விக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை செந்தமிழ்ச் செல்வி வீட்டில் உயிரிழந்த நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பண்டரிநாதனும் உயிரிழந்தார்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, “கணவர் விபத்தில் காயமடைந்த
தகவல் கிடைத்ததும், செந்தமிழ்ச் செல்விக்கு மாரடைப்பு ஏற்பட்டது” என்றுத் தெரிவித்தனர்.

மரணத்திலும் பிரியாத இத் தம்பதிகளை அடக்கம் செய்ய, ஒரே பாடையில் வைத்துக் கொண்டுச் சென்றனர். 

இந்தச் சம்பவங்கள் குறித்து வாய்மேடு காவல் நிலைய காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவரும் மனைவியும் இறந்த சம்பவம் அந்தபகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

NewsFast Logo