இன்று பட்டையைக் கிளப்பப் போவது யார்? கொல்கத்தாவா? குஜராத்தா? - NewsFast
NewsFast Logo

இன்று பட்டையைக் கிளப்பப் போவது யார்? கொல்கத்தாவா? குஜராத்தா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-ஆவது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் இன்று கொல்கத்தாவில் எதிர்கொள்கின்றன.

இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி நான்கு வெற்றிகளையும், குஜராத் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

கொல்கத்தா அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. கேப்டன் கெளதம் கம்பீர், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ராபின் உத்தப்பா, சூர்யகுமார் யாதவ் போன்றோர் அந்த அணியின் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கின்றனர்.

வேகப்பந்து வீச்சில் நாதன் கோல்ட்டர் நீல், டிரென்ட் போல்ட், காலின் டி கிராண்ட்ஹோம் போன்றவர்களும், சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், சுநீல் நரேன், ஷகிப் அல்ஹசன் போன்ற வீரர்களும் கொல்கத்தா அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

ஆனால், குஜராத் அணியில் அப்படியில்லை. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பிரென்டன் மெக்கல்லம் நன்றாக ஆடுகின்றனர். ஆனால், டுவைன் ஸ்மித், கேப்டன் சுரேஷ் ரெய்னா, ஆரோன் ஃபிஞ்ச், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் அதிரடியாக ஆடினால்தான் அந்த அணி பெரிய அளவில் ரன் குவிக்க முடியும்.

பேட்டிங் மட்டுமின்றி, அந்த அணியின் பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடவில்லை. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு ஆகும்.

English Summary

Whos going to arrive today? Kolkattava? Kujaratta?

NewsFast Logo