வறுமையில் வாடிய காமெடி நடிகர் குடும்பம்... ஓடி போய் உதவிய இளையதளபதி விஜய்... - NewsFast
NewsFast Logo

வறுமையில் வாடிய காமெடி நடிகர் குடும்பம்... ஓடி போய் உதவிய இளையதளபதி விஜய்...

இயக்குனர் எழில் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு, வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற படம் "துள்ளாத மனமும் துள்ளும்".

இயக்குனர் எழில் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு, வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற படம் "துள்ளாத மனமும் துள்ளும்".

இந்த படம், விஜய் மற்றும் சிம்ரனுக்கு சினிமா பயணத்தில் மிக முக்கியமானது என்று கூட கூறலாம், காரணம் விஜயை வேறு விதமாக  பிரதிபலித்திருப்பார் இயக்குனர் அந்த மாற்றம் தான் இந்த திரைப்படத்தை இன்று வரை ரசிகர்கள் மனதில் நிலைநிறுத்தியுள்ளது.

சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படத்தில் ஒரு சிறு காமெடி கேரக்டரில் நடித்தவர் காமெடி நடிகர் டவுசர் பாண்டி.  இவர் இந்த படத்தில் பயணி ஒருவருக்கு வழிசொல்லும் காமெடி இன்றும் பிரபலமானது.

கோலிவுட்டில் மிகப்பெரிய காமெடி நடிகர்களில் ஒருவராக வருவதற்கான அத்தனை திறமைகளும் டவுசர் பாண்டியிடம் இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த படம் வெளியான ஒருசில நாட்களில் அவர் ஒரு விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  டவுசர் பாண்டியின் குடும்பத்தினர் வறுமையில் வாடுவதாக நண்பர் ஒருவர் மூலம் கேள்வி பட்டு, உடனடியாக   அவருடைய குடும்பத்திற்கு ஓடி போய் உதவிகள் செய்துள்ளார் விஜய்.  

English Summary

vijay help comedy actors family

NewsFast Logo