மன்னிப்பு கேட்டும் சத்யராஜ் உருவ பொம்மை எரிப்பு!  திரையரங்குகள் முன் தீயிட்டு வாட்டாள் நாகராஜன் அட்டூழியம்... - NewsFast
NewsFast Logo

மன்னிப்பு கேட்டும் சத்யராஜ் உருவ பொம்மை எரிப்பு!  திரையரங்குகள் முன் தீயிட்டு வாட்டாள் நாகராஜன் அட்டூழியம்...

பெங்களூரில்  கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், நடிகர் சத்யராஜ அவர்களின் உருவபொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெங்களூரில்  கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், நடிகர் சத்யராஜ அவர்களின் உருவபொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு சத்யராஜ் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ் திரைப்படக் கலைஞர்கள் சார்பாக கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், “அங்கு வாட்டாள் நாகராஜ் என்கிற ஒரு பெரிய காமெடியன் இருக்கிறார். நல்லவேளை அவர் சினிமாவுக்கு வரவில்லை. வந்திருந்தால் வடிவேலுவை எல்லாம் மிஞ்சியிருப்பார்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், தமண்ணா, ராணா டகுபதி, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பாகுபலி-2 வெளியாகவுள்ளது. இதனையடுத்து திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் கொந்தளிப்புடன் கூறியுள்ளார்.

இதற்கிடையில், நடிகர் சத்யராஜ் தனது பேச்சு யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

ஆனாலும், கன்னட  சலுவாலி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், நடிகர் சத்யராஜ அவர்களின் உருவபொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English Summary

Vattal Nagaran Protest Against Actor Sathyaraj for Baahubali 2

NewsFast Logo