போன் செய்து காவல்துறையை வெறுப்பேத்திய மர்ம நபர்… - NewsFast
NewsFast Logo

போன் செய்து காவல்துறையை வெறுப்பேத்திய மர்ம நபர்…

ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு, மர்ம நபர் போன் செய்ததை தொடர்ந்து விசாரித்ததில் கொலை ஏதும் நடக்கவில்லை என்று அறிந்த காவல்துறையினர் வெறுப்பாயினர்.

தூத்துக்குடி,

ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு, மர்ம நபர் போன் செய்ததை தொடர்ந்து விசாரித்ததில் கொலை ஏதும் நடக்கவில்லை என்று அறிந்த காவல்துறையினர் வெறுப்பாயினர்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளது.

இங்குள்ள தொலைபேசி எண் 100–க்கு வெள்ளிக்கிழமை மதியம் ஒரு அழைப்பு வந்தது.

அதில் கணேசன் என்பவர் பேசுவதாகவும், புதுக்கோட்டையில் குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்தில் சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாகவும் கூறிவிட்டு, இணைப்பு துண்டித்து உள்ளார்

இதனால், பரபரப்பான கட்டுப்பாட்டு அறை காவலாளர்கள் அந்த தொழிற்சாலை பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு தீவிர சோதனையும் நடத்தினர். ஆனால், அங்கு கொலை நடந்ததற்கான எந்த தடயங்களும் இல்லை. பின்னர், அது வெறும் வதந்தி என தெரிய வந்தது.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசியவரின் செல்போன் எண்ணை வைத்து காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.

அந்த செல்போன் எண் தூத்துக்குடியை சேர்ந்த செல்வம் என்பவர் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. அந்த முகவரிக்கு காவலாளர்கள் சென்று விசாரித்தபோது, செல்வம் என்ற பெயரில் யாரும் இல்லை என தெரிய வந்தது.

பொய்யான முகவரி கொடுத்து செல்போன் எண் பெற்றுள்ள மர்ம நபர் தான், வீண் வதந்தியை பரப்பியுள்ளார் என்று காவல்துறையினர் வெறுப்படைந்தனர்.

அந்த நபர் யார்? என்பது குறித்து காவலாளர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

NewsFast Logo