கே.எம்.சி. முன்பு மறியல் செய்த திருநங்கைகள் மீது தடியடி - கமிஷனர் அலுவலகம் முற்றுகை - NewsFast
NewsFast Logo

கே.எம்.சி. முன்பு மறியல் செய்த திருநங்கைகள் மீது தடியடி - கமிஷனர் அலுவலகம் முற்றுகை

திருநங்கை தாரா தீக்குளித்து இறந்தது சம்பந்தமாக நேற்று கேஎம்சி மருத்துவ மனையின் முன்பு திருநங்கைகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்றும் கே.எம்.சி.மருத்துவமனையின் முன்பு ஆர்பாட்டம் செய்தனர். அப்போது சமாதானப்படுத்திய தெற்குமண்டல இணை ஆணையர் அன்புவை பிடித்து தள்ளிவ

திருநங்கை தாரா தீக்குளித்து இறந்தது சம்பந்தமாக நேற்று கேஎம்சி மருத்துவ மனையின் முன்பு திருநங்கைகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்றும் கே.எம்.சி.மருத்துவமனையின் முன்பு ஆர்பாட்டம் செய்தனர். அப்போது சமாதானப்படுத்திய தெற்குமண்டல இணை ஆணையர் அன்புவை பிடித்து தள்ளிவிட்டனர். 

மற்ற காவல் அதிகாரிகளை தரக்குறைவாக பேசினர். சைதாப்பேட்டை லிமிட் எஸ்.ஐ ஒருவரை தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனால் போலீசார் லேசாக தடையடி நடத்தி அவர்களை கலைத்தனர். 

இதையடுத்து கூட்டமாக கிளம்பிய திருநங்கைகள் கமிஷனர் அலுவலகம் நோக்கி படையெடுத்தனர். இதையடுத்து போலீசார் கமிஷனர் அலுவலகத்தை மூடிவிட்டனர். பின்னர் ஐந்து பேர் மட்டும் உள்ளேசென்று புகார் அளித்தனர். 

பின்னர் கூடுதல் துணை ஆணையர் ஷியாமளா அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். 

வாங்கி கட்டிகொண்ட உதவி கமிஷனர்.: பொதுவாக திருநங்கைகள் என்றாலே போலீசார் சற்று தள்ளி இருப்பார்கள். போலீசாரை கண்டு பயப்படாமல் திட்டுவது அவர்கள் வழக்கம். நேற்று உதவி கமிஷனர் சுப்ரமணியம் முகத்தின் அருகே கைகளால் தட்டி தட்டி வம்பிழுத்தனர்.

இன்று எஸ்.ஐ ஒருவர் தாக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சைதாப்பேட்டை உதவி கமிஷனர் சிவ பாஸ்கர் நீங்கள் சைதாப்பேட்டை பக்கம் வந்தால் நடப்பதே வேறு என்று கூறினார். அவ்வளவுதான் அனைத்து திருநங்கைகளும் அவரை சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்துவிட்டனர். ஆவேசத்தில் இருந்த அவர்களை எதுவும் செய்ய முடியாமல் சக உதவி கமிஷனர்கள் போலீசார் வேடிக்கை பார்த்தனர்.

English Summary

Shemale protest against to TN Government - Source says

NewsFast Logo