விஜய்க்கு ஓகே என்றால் 'கில்லி 2 ' நான் தயார் - தரணி.. - NewsFast
NewsFast Logo

விஜய்க்கு ஓகே என்றால் 'கில்லி 2 ' நான் தயார் - தரணி..

விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு தேடித்தந்த திரைப்படம் 'கில்லி'. இந்த படம் வெளிவந்து 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும்

விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு தேடித்தந்த திரைப்படம் 'கில்லி'. இந்த படம் வெளிவந்து 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் ரசிகர்கள் இந்த படத்தை இன்னும் மறக்கவில்லை என்பது கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிய வந்தது. 

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று விஜய் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக கேள்வி கேட்டு வருகின்றனர். இயக்குனர் தரணியும் பல பேட்டிகளில் 'கில்லி 2' குறித்து பேசியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து தரணி கூறியபோது, 'கில்லி 2' ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது. விஜய் எப்போது ஓகே சொன்னாலும் நான் இயக்க தயாராக இருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

மீண்டும் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், தரணி, ஆகியோர் இணையும் கூட்டணி சாத்தியமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English Summary

tharani ready for killi 2

NewsFast Logo