போலி கடவுச்சீட்டு தயாரித்து இலங்கைச் செல்ல முயன்ற சகோதரர்கள் கைது… - NewsFast
NewsFast Logo

போலி கடவுச்சீட்டு தயாரித்து இலங்கைச் செல்ல முயன்ற சகோதரர்கள் கைது…

மதுரையில் இலங்கைச் செல்வதற்காக போலி கடவுச்சீட்டு தயாரித்த சகோதரர்கள் இருவரை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

அவனியாபுரம்,

மதுரையில் இலங்கைச் செல்வதற்காக போலி கடவுச்சீட்டு தயாரித்த சகோதரர்கள் இருவரை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் விருப்பாச்சி பகுதியைச் சேர்ந்தவர் மார்கண்டு. இவரது மகன்கள் செந்தூரான் (39), கோபிதரன் (36). இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் இலங்கைச் செல்வதற்காக நேற்று மதுரை விமானநிலையம் வந்து இருந்தனர். அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் இருவரும் வைத்திருந்த கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவர்களிடம் விசாரித்ததில், அதனை அவர்களே தயாரித்துள்ளனர் என்பது தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்களை, சுங்கத்துறை அதிகாரிகள் பெருங்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்பு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

NewsFast Logo