புயலுக்கு கூண்டு ஏத்துனா வெயில் அடிக்குதே..! - Asianet News Tamil
NewsFast Logo

புயலுக்கு கூண்டு ஏத்துனா வெயில் அடிக்குதே..!

புயல் காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று எச்சரித்து, இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. ஆனால், புயலுக்கு பதிலாக அதிகமான அளவு வெயில் அடித்தது.

நாகப்பட்டினம்,

புயல் காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று எச்சரித்து, இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. ஆனால், புயலுக்கு பதிலாக அதிகமான அளவு வெயில் அடித்தது.

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு “வார்தா” என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்தது.

மேலும், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து நாகை துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு புயல் சின்னம் குறித்து அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நேற்று 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

புயலுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு, எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது. ஆனால், நாகையில் நேற்று வழக்கத்தை விட அதிகமான அளவு வெயில் அடித்தது.

மழை பெய்யும் என்று எச்சரித்து இருந்ததால், கடலுக்கு செல்லாமல் இருந்த மீனவர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

NewsFast Logo