"உர்ஜித்திடம் சில உண்மைகள் தெரிஞ்சாகணும்…" மீண்டும் சம்மன் அனுப்புகிறது நாடாளுமன்ற நிலைக்குழு - NewsFast
NewsFast Logo

"உர்ஜித்திடம் சில உண்மைகள் தெரிஞ்சாகணும்…" மீண்டும் சம்மன் அனுப்புகிறது நாடாளுமன்ற நிலைக்குழு

ரூபாய் நோட்டு தடைக்குப் பின், செல்லாத நோட்டுகள் எவ்வளவு வந்தன, அதன்மதிப்பு உள்ளிட்ட சில விடை தெரியாத

ரூபாய் நோட்டு தடைக்குப் பின், செல்லாத நோட்டுகள் எவ்வளவு வந்தன, அதன்மதிப்பு உள்ளிட்ட சில விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் கேட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு நாடாளுமன்ற குழு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.

நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒ ழிக்கும் வகையில், ரூ.500,ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத நோட்டுகளை வங்கிகள், தபால்நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இந்த தடைக் காலத்தில் மக்கள் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்தனர், ரூபாய் நோட்டு மாற்றுவதற்காக வங்கிகளின் வாசலில் வரிசையில் நின்றதில் 100-க்கும் அதிகமானவர்கள் இறந்தனர்.

இதையடுத்து, ரூபாய் நோட்டு தடையை யார் கொண்டு வந்தது, எப்போது முடிவு எடுக்கப்பட்டது, இந்த தடைக்கு முன்பாக ரிசர்வ் வங்கி எப்படி தயாராகி இருந்தது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடைகாணும் வகையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலை நேரில் அழைத்து விளக்கம் கேட்க நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்தது.

இதுவரை காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு முன், 2 முறை உர்ஜித்படேல் நேரில் சென்று விளக்கம் அளித்தார். அப்போது முக்கியமான பல கேள்விகளுக்கு அவரால் விளக்கம் அளிக்க முடியவில்லை.

ரூபாய் நோட்டு தடைக் காலத்துக்கு பின் வங்கிகளுக்கு வந்தசெல்லாத ரூபாய் நோட்டு மதிப்பு எவ்வளவு, எந்த அளவுக்கு இந்த தடைக்கு முன்பாக ரிசர்வ் வங்கி தயாராகி இருந்தது. உள்ளிட்ட பல கேள்விகளுக்கு கவர்னர் உர்ஜித் படேல் முறையான விளக்கம் அளிக்கவில்லை.

இதற்கு முன் கடந்த நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில், எம்.பி.க்கள் உர்ஜித் படேலை கேள்விகளால் துளைத்து எடுத்தபோது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் இருந்து உர்ஜித் படேலை காப்பாற்றினார்.

இதன்பின், நாடாளுமன்ற நிலைக்குழு உர்ஜித் படேலை அழைத்து விளக்கம் கேட்கவில்லை.இந்நிலையில், பிஜூஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்டகட்சிகள் மீண்டும் உர்ஜித் படேலை அழைத்து விடையளிக்காத பலகேள்விகளுக்கு விளக்கம் கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளன.

இதையடுத்து மே மாதம் 25-ந்தேதிக்கு முன்பாக, நாடாளுமன்ற நிலைக்குழு முன், உர்ஜித்படேல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப் பட உள்ளது. 

English Summary

parliament sends summon to urjit patel

NewsFast Logo