இனி ஹோட்டல்களில் 'Service Tax' கட்டாயமில்லை - மத்திய அரசு அதிரடி - NewsFast
NewsFast Logo

இனி ஹோட்டல்களில் 'Service Tax' கட்டாயமில்லை - மத்திய அரசு அதிரடி

ஹோட்டல்களில் சேவை கட்டணம் கட்டாயமில்லை என்ற புதிய விதிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஹோட்டல்களில் சேவை கட்டணம் கட்டாயமில்லை என்ற புதிய விதிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் இதுகுறித்த நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு விதிமுறைகளை அனுப்பி உள்ளது.

உணவகங்களில் உணவு சாப்பிட்ட பின் சாப்பாட்டு பில்லுடன் சேர்த்து சேவைக்கான கட்டணத்தையும் சேர்த்து கட்டவேண்டி இருந்தது.  சேவை கட்டணமானது 5 சதவீதம் முதல் 20 சதவீதம் இருந்து வருகிறது.

சேவை கட்டணத்தை கட்டாயமாக நுகர்வோரிடம் இருந்து வசூலிப்பது முறையாகாது என மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.

சேவை கட்டணம் வசூலிப்பது குறித்து நுகர்வோரும் ஹோட்டல் சங்கமும் தான் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

இதையடுத்து திருப்தி இல்லாத சேவையை பெரும் வாடிக்கையாளர்கள் சேவை கட்டணம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என நுகர்வோர் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹோட்டல்களில் சேவைக் கட்டண விதிப்பு கட்டாயமல்ல எனவும்,  ஹோட்டல்களில், உணவு வழங்கும் பணி சிறப்பாக இருப்பதாக சாப்பிட்டவர்கள் கருதினால் சேவைக்கட்டணம் தாமாக முன் வந்து வழங்கலாம் எனவும் உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஹோட்டல்களில் சேவை கட்டணம் கட்டாயமில்லை என்ற புதிய விதிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் இதுகுறித்த நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு விதிமுறைகளை அனுப்பி உள்ளது

English Summary

no service tax for hotels a new rule by central govt

NewsFast Logo