நிஸான் அதிரடி!  Leaf எலக்ட்ரிக்! ஒருமுறை சார்ஜ் செய்தாலே 170 கிலோமீட்டர் பயணிக்கும்... - NewsFast
NewsFast Logo

நிஸான் அதிரடி!  Leaf எலக்ட்ரிக்! ஒருமுறை சார்ஜ் செய்தாலே 170 கிலோமீட்டர் பயணிக்கும்...

கார் தயாரிப்பு பொறுத்தவரை நிசான் நிறுவனத்திற்கு எப்பொழுதும் மக்கள் மனதில் ஒரு தனி இடம் உண்டு. ஜப்பானை சேர்ந்த நிசான்  நிறுவனத்தின் கார் என்றால், மக்களிடேயே நல்ல வரவேற்பை பெரும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது

கார் தயாரிப்பு பொறுத்தவரை நிசான் நிறுவனத்திற்கு எப்பொழுதும் மக்கள் மனதில் ஒரு தனி இடம் உண்டு. ஜப்பானை சேர்ந்த நிசான்  நிறுவனத்தின் கார் என்றால், மக்களிடேயே நல்ல வரவேற்பை பெரும் என்பதில் எந்த   மாற்றமும் இருக்காது.

இந்நிலையில்,லீப் ரகத்திலான எலக்ட்ரிக் காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய நிசான்   நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது, #Leaf என்ற பெயரில், எலக்ட்ரிக் காரை தயாரித்து வருகிறது. 

தற்போது இந்த காரானது, அமெரிக்கா மற்றும் ஜப்பானில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களும் இந்த காரை போட்டி போட்டுக்கொண்டு  வாங்கி வருகின்றனர்.  
சிறப்பம்சங்கள்

இந்த காரை, ஒருமுறை பேட்டரி சார்ஜ் செய்தால் போதும், 170 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய சிறப்பு வாய்ந்தது. 107 பிஹெச்பி எலக்ட்ரிக் என்ஜீன் கொண்டுள்ளது

இந்த எலக்ட்ரிக் காரில், மற்ற கார்களில் உள்ளது போலவே, அனைத்து சிறப்பம்சங்களும்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக பிஎஸ் 3 ரக எஞ்சின் கொண்ட வாகனங்களின் விற்பனைக்கு கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் Leaf எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய நிசான்  முடிவு செய்துள்ளதால், இந்த  வாகனம் மற்ற கார்களுக்கு போட்டியாக  அமையும் என  எதிர்பார்க்கப்படுகிறது.  யில்

English Summary

Nissan explores Leaf electric car for India pilot runs later this year

NewsFast Logo