"ஸ்டார்ட்டிங் நல்லாத்தான் இருக்கு.. ஃபினிசிங் சரியில்லையே" - அமைச்சர் செல்லூர் ராஜுவின் அடடே பிளான்! - NewsFast
NewsFast Logo

"ஸ்டார்ட்டிங் நல்லாத்தான் இருக்கு.. ஃபினிசிங் சரியில்லையே" - அமைச்சர் செல்லூர் ராஜுவின் அடடே பிளான்!

வைகை அணையில் எஞ்சியிருக்கும் நீரை காப்பாற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

வைகை அணையில் எஞ்சியிருக்கும் நீரை காப்பாற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அடிக்கற வெயில தாங்க முடியலடா சாமி பலரும் தலதெறிக்க ஓட வைகை அணை மட்டும் இதுக்கு விதி விலக்கா என்ன? மதுரையையே செழிப்பாக்கிய இந்த ஜீவகாருண்யம் தற்போது ஜீவனுக்காக போராடி வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தினால் வைகை அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதற்கிடையே அணையில் எஞ்சியில் இருக்கும் நீர் ஆவியாகமல் தடுக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டம் தீட்டி அதனை செயல்படுத்தியும் காட்டினார்.

வைகை அணையில் உள்ள நீர்நிலைகள் மீது தெர்மாகோல் கொண்டு மூடுவதே அத்திட்டம். வெளிநாடுகளில் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி 10 லட்சம் ரூபாய் செலவில் 200 சதுர அடிக்கு தெர்மாகோல் சீட்டால் மூடப்பட்டது. ஆனால் உரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாததால் தற்போது எல்லா சீட்டுகளும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத் தான் இருக்கு பினிசிங் சரியில்லையே..!!

English Summary

minister sellur raju plan on vaigai dam

NewsFast Logo