ஆண், பெண் பாரபட்சமின்றி மொட்டையடித்து முதல்வருக்கு மரியாதை… - NewsFast
NewsFast Logo

ஆண், பெண் பாரபட்சமின்றி மொட்டையடித்து முதல்வருக்கு மரியாதை…

கரூரில், முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அதிமுகவினர் அஆண், பெண் பாரபட்சமின்றி மொட்டையடித்து முதல்வருக்கு மரியாதை செலுத்தினர்.

கரூர்,

கரூரில், முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அதிமுகவினர் அஆண், பெண் பாரபட்சமின்றி மொட்டையடித்து முதல்வருக்கு மரியாதை செலுத்தினர்.

முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி தமிழகத்தில் பலர் மொட்டையடித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் கரூர் மாவட்டத்திலும் ஜெயலலிதாவின் உருவப்படத்தின் முன்பு அமர்ந்து அதிமுகதொண்டர்கள் ஆண், பெண் என அனைவரும் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.

நேற்று கரூர் நகர் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர், மொட்டை அடித்துக்கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.

அதே போன்று அந்த பகுதியில் உள்ள பெண்கள் பலர் பூ முடி எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக அவர்கள் ஜெயலலிதாவின் உருவப்படம் முன்பு அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடத்தினர்.

இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

NewsFast Logo