பொதுமக்களுக்கு எச்சரிக்கை! - வரும் 25ஆம் தேதி கோயம்பேடு மூடல்! - NewsFast
NewsFast Logo

பொதுமக்களுக்கு எச்சரிக்கை! - வரும் 25ஆம் தேதி கோயம்பேடு மூடல்!

வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்தில், கோயம்பேட்டில் கடை வியாபாரிகள் பங்கு பெறுவார்கள்

வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்தில், கோயம்பேட்டில் கடை வியாபாரிகள் பங்கு பெறுவார்கள் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை [16-04-2017] அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், தமிழக விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ராயப்பேட்டையில் நடைபெற்றது.

அதில், வரும் 25ஆம் தேதி கோயம்பேட்டில் இயங்கிவரும் காய்கறி கடைகள், பழக்கடைகள், பூ வியாபாரிகள் ஆகியோர் இந்த கடையடைப்பு போராட்டத்தில் பங்கு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

English Summary

koyambedu market will be closed on 25th

NewsFast Logo