பத்திர பதிவு செய்ய முடியுமா? முடியாதா? - 2 வாரத்தில் வருகிறது புதிய விதிகள்..! - NewsFast
NewsFast Logo

பத்திர பதிவு செய்ய முடியுமா? முடியாதா? - 2 வாரத்தில் வருகிறது புதிய விதிகள்..!

தமிழகத்தில் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி போட்டு விற்பதற்கு தடை செய்ய வேண்டும் என யானை ராஜேந்திரன்

தமிழகத்தில் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி போட்டு விற்பதற்கு தடை செய்ய வேண்டும் என யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றதில் வழக்கை தொடர்ந்தார்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிமன்ற அமர்வு, 2௦16 ஆம் ஆண்டு அக்டோபர்  2௦ ஆம் தேதிக்கு முன்னதாக பதிவு செய்யப்பட்ட மனைகளை, மீண்டும் மறுபதிவு செய்யலாம் என  தெரிவித்து இடைக்கால தீர்ப்பை வழங்கியது உயர்நீதிமன்றம் .

இதனையும் எதிர்த்து மீண்டும் யானை  ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.  இந்நிலையில் இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின் முடிவில், அங்கீகாரம் இல்லாத வீடுமனைகளை வரைமுறை படுத்த 2 வாரத்தில் விதிகள் கொண்டுவரப்படும் என தமிழக அரசு  சார்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது 

இதனை தொடர்ந்து அடுத்த 2 வாரத்தில்,தமிழகத்தில் நிலவும் ரியல் எஸ்டேட் தொடர்பான அனைத்து  பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும், விலை நிலங்களை வீட்டு மனைகளாக போடுவதற்கு முற்றிலும் முழுக்கு ஏற்படும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.    

English Summary

judgement on land registration

NewsFast Logo