இறந்த பின்னும் அமெரிக்காவை கலக்கும் ஜெயலலிதா ...!!!  “ஜெயலிதா பெயரில்“ சேவை மையம் தொடங்கி அசத்தல் ..!!! - Asianet News Tamil
NewsFast Logo

இறந்த பின்னும் அமெரிக்காவை கலக்கும் ஜெயலலிதா ...!!!  “ஜெயலிதா பெயரில்“ சேவை மையம் தொடங்கி அசத்தல் ..!!!

இறந்த பின்னும் அமெரிக்காவை கலக்கும் ஜெயலலிதா

இறந்த பின்னும் அமெரிக்காவை கலக்கும் ஜெயலலிதா ...!!!  “ஜெயலிதா பெயரில்“ சேவை மையம்” தொடங்கி அசத்தல் ..!!!

மறைந்த  முதல்வர் ஜெயலலிதா பெயரில் , அமெரிக்க  தலைநகர்  வாஷிங்டன்னில்  சேவை மையம்  ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.  

அமெரிக்காவில் , வாஷிங்டன், கேபிடல் ஹில்ஸில் அமெரிக்க எம்.பி.,க்கள் டேன்னி கே டேவிஸ் மற்றும் ராஜா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஜெயலலிதா பெயரில் சேவை மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது

.

இந்த மையத்தை அமெரிக்க எம்.பி.க்கள் இல்லினாய்சை சேர்ந்த டேன்னி கே.டேவிஸ் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், வழிநடத்துவர்  என  தெரிகிறது.

இந்த  விழாவின்  தொடக்கமாக,  ஜெயலலிதாவின்  உருவ  படத்தை  வைத்து, மலர்  தூவி மரியாதை  செலுத்தினர்.பெண்களுக்காக  மிக உயரிய  அளவில்  நல்ல  திட்டங்களை  வகுத்தது  “ அம்மா  ஜெயலலிதா  தான் “  என  பெருமை  பட  தெரிவித்துள்ளார் ,

இந்த சேவை மையத்தின் தலைவர் டேன்னி கே.டேவிஸ். மேலும் பேசிய  அவர் , அம்மாவின்  நலத்திட்டங்களை இந்த   சேவை  அமைப்பின்  மூலம்  தொடர்ந்து செயல்படுத்த  உள்ளதாக   விருப்பம்  தெரிவித்தார் .

NewsFast Logo