சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டனில் இந்தியா ஆட்டம் முடிவுக்கு வந்தது… - NewsFast
NewsFast Logo

சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டனில் இந்தியா ஆட்டம் முடிவுக்கு வந்தது…

சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன்

சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப் மற்றும் ஹர்சீல் தோல்வியடைந்ததால் இந்தப் போட்டியில் இருந்து இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி சீனாவின் சங்ஜௌ நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காஷ்யப் – கியாவ் பின் ஆகியோர் மோதினர்.

இந்தப் போட்டியில் 10-21, 22-20, 13-21 என்ற செட் கணக்கில் சீனாவின் கியாவ் பின், காஷ்யப்படை தோற்கடித்தார்.

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஹர்ஷீல் டேனி - சீனாவின் சங் பெய்க்ஸியாங்க் மோதினர்.

இந்தப் போட்டியில் 17-21, 18-21 என்ற நேர் செட்களில் சீனாவின் சன் பெய்க்ஸியாங்கிடம், ஹர்ஷீல் தோல்வி கண்டார்.

இதன்மூலம் சீன மாஸ்டர்ஸ் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுப் பெற்றது.

English Summary

Indian game ended in Chinese Masters Grantfield Gold Badminton

NewsFast Logo