சிறுவர்களுக்கு இந்தக் கீரையை கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார்கள்… - NewsFast
NewsFast Logo

சிறுவர்களுக்கு இந்தக் கீரையை கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார்கள்…

முளைக்கீரை அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை.

முளைக்கீரை அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை. இக்கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, போலேட் மற்றும் ரிபோப்லாவின் ஆகியவற்றை கொண்டுள்ளது.

நீர்சத்து அதிகமுள்ள முளைக்கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் தன்மை கொண்டது.  

உடலுக்கு பலம் கூட்டும் சக்தியை கொண்டது.

சிறுவர்களுக்கு இந்தக்கீரையை தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார்கள்.

முளைக்கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மங்கனீசு போன்ற கணிமங்களை கொண்டுள்ளது.

கோதுமை, அரிசி, ஓட்ஸ், ஆகியவற்றில் கொண்டுள்ள புரதத்தை விட 30% அதிகபுரதத்தை கொண்டுள்ளது.

இதயநோய், உயர் இரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கு முளைக்கீரை உதவுகிறது.
 

NewsFast Logo