கடும் வறட்சி - அடிமாட்டு விலைக்கு இறைச்சிக்காக விற்கப்படும் மாடுகள்… - NewsFast
NewsFast Logo

கடும் வறட்சி - அடிமாட்டு விலைக்கு இறைச்சிக்காக விற்கப்படும் மாடுகள்…

உப்பிடமங்கலம் பகுதிகளில் வீட்டுமனைகளாக மாறிவிட்ட மேய்ச்சல் நிலங்களாஅல், மாடுகளை அடிமாட்டு விலைக்கு இறைச்சிக்காக விற்று வருகின்றனர் அந்த ஊர் மக்கள்.

உப்பிடமங்கலம் பகுதிகளில் வீட்டுமனைகளாக மாறிவிட்ட மேய்ச்சல் நிலங்களாஅல், மாடுகளை அடிமாட்டு விலைக்கு இறைச்சிக்காக விற்று வருகின்றனர் அந்த ஊர் மக்கள்.

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலோனோர் வசிக்கின்றனர். இங்குள்ள பல வீடுகளில் மாடுகள் வளர்த்து உழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் தற்போது வீட்டுமனையாக மாறி விட்டதால் மாடுகளை மேய்க்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் மாட்டுத்தீவனங்கள் விலை அதிகரிப்பு மற்றும் பராமரிப்பு செலவு காரணமாக அப்பகுதி விவசாயிகள் பலர் பால் தரும் மாடுகளை மட்டுமே வைத்துக் கொண்டு மற்ற மாடுகளை விற்று விடுகின்றனர்.

உப்பிடமங்கலத்தில் புகழ் பெற்ற மாட்டுச் சந்தை இருக்கிறது. இந்த மாட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை இயங்கும்.

இந்த நிலையில் உப்பிடமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் மாடுகளை இங்கு வந்து விற்றுச் செல்கின்றனர்.

இங்கு விற்கப்படும் மாடுகளை கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வியாபாரிகளும், கேரள மாநிலத்தை சேர்ந்த மாட்டு வியாபாரிகளும் வாங்கிச் செல்கின்றனர்.

கேரளாவை காட்டிலும் இங்கு மாடுகள் விலை மிகவும் குறைவாக இருப்பதால் வேன், லாரிகளில் வந்து ஆயிரக்கணக்கான அளவில் மாடுகளை வாங்கிச் செல்கின்றனர்.

நல்ல மாடுகள் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மாடு ரூ.15 ஆயிரத்திற்கும், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மாடு ரூ.10 ஆயிரத்திற்கும் கிடைப்பதால் அடிமாட்டு விலையில் வாங்கிச் செல்கின்றனர்.

இவ்வாறு வெளியூருக்கு கொண்டு செல்லப்படும் மாடுகள் அங்கு இறைச்சிக்காக பயன்படுத்தபடுகிறது.

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதால் பால் உற்பத்தியும் குறைந்து வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள், “மாட்டுத் தீவனங்களின் விலை அதிகமாக இருப்பதால் எங்களால் மாடுகளுக்கு உணவளித்து பராமரிக்க முடியவில்லை. இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு மாட்டு தீவனங்களின் விலையை குறைத்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது பருவமழை பொய்த்து போனதால் எங்களால் விவசாயமும் செய்ய முடியவில்லை. மாடுகளை வைத்துதான் நாங்கள் உழைத்து வருகிறோம்” என்றுத் தெரிவித்தனர்.

NewsFast Logo