மீன்களை பிடிங்கிக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை… - NewsFast
NewsFast Logo

மீன்களை பிடிங்கிக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை…

நாகை மாவட்டம், கடலுக்குள் சென்ற நாகை மீனவர்கள் 9 பேரிடம் இருந்து மீன்களைப் பிடிங்கிக் கொண்டு, இலங்கை கடற்படையினர் மீன்வர்களை விரட்டியடித்துள்ளனர்.

நாகை மாவட்டம், கடலுக்குள் சென்ற நாகை மீனவர்கள் 9 பேரிடம் இருந்து மீன்களைப் பிடிங்கிக் கொண்டு, இலங்கை கடற்படையினர் மீன்வர்களை விரட்டியடித்துள்ளனர்.

நாகை செருதூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ரெத்தினவேல் (53), கவியரசன் (24), நிவாஸ் (18), விஜயரசன் (20), ஜெயபிரகாஷ் (18), பிரவீன் (19), வினோத் (27), விக்கி (24), முருகவேல் (32) ஆகிய 9 பேரும் கோடியக்கரையில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் வியாழக்கிழமை காலை 3 கண்ணாடியிழைப் படகுகளில் கடலுக்குள் சென்றுள்ளனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் கோடியக்கரைக்கு அப்பால் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீன்களை பிடிங்கிக் கொண்டு எச்சரித்து விரட்டி அடித்துள்ளனர்.

இதனையடுத்து, படகுகளுடன் கோடியக்கரையில் கரையை அடைந்த மீனவர்களிடம் தனிப்பிரிவு மற்றும் கடலோரக் காவல் நிலைய காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.

NewsFast Logo