வந்துவிட்டது அசத்தலான இருசக்கர வாகன குடை..! இனி120 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தையும் சமாளிக்கலாம்...   - NewsFast
NewsFast Logo

வந்துவிட்டது அசத்தலான இருசக்கர வாகன குடை..! இனி120 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தையும் சமாளிக்கலாம்...  

இனி120 டிகிரி வெப்பத்தையும் சமாளிக்கலாம்...

கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, மத்திய வேளையில்   வெளியில் செல்ல வேண்டும் என்றால், மீண்டும் வீடு திரும்ப முடியுமா என்ற அளவிற்கு பயம் ஏற்பட  வைக்கிறது தற்போது நிலவும் கோடை வெயில்.

அதற்காக மக்கள் வெளியில் செல்லாமல் இருக்கவும் முடியாது, மருத்துவமனை, அலுவலகம் என  செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.அதிலும் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஒவ்வொரு   சிக்னலிலும் நிற்கும்போது, வெப்பம் தாங்க முடியாமல் தவிப்பது கண் முன்னே காண முடியும்.

சரி இதிலிருந்து எப்படி தப்பிப்பத்து என யோசனை செய்யும் போது தான் வரப்பிரசாதமா, இரு சக்கர வாகன் ஓட்டிகள் பயன்படுத்தும் விதமாக வடிமைக்கப்பட்ட வாகன குடை அறிமுகம் செய்யப்பட்டு  விற்பனையும் அமோகமாக உள்ளது .

வடிவமைப்பில் சில மாற்றம் மற்றும் நிறங்கள் என சிலவற்றின் வேறுபாட்டை பொருத்து, விலை சற்று மாறு படுகிறது. இந்த இருசக்கர வாகன குடையின்  தொடக்க விலையானது 999  ரூபாயிலிருந்து   தொடங்குகிறது

அடுத்து வரும் சில மாதங்களுக்கு இந்த குடையின் விற்பனை அதிகரிக்கும் என தெரிகிறது. அதே  போன்று இதனை பயன்படுத்தி வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது   

English Summary

bike umbrella introduced

NewsFast Logo