மது அருந்திவிட்டு உதவி ஆய்வாளரை அடித்து விலாசிய காவலர்… - NewsFast
NewsFast Logo

மது அருந்திவிட்டு உதவி ஆய்வாளரை அடித்து விலாசிய காவலர்…

தூத்துக்குடியில் மது அருந்திவிட்டு காவல் உதவி ஆய்வாளரை, அடித்து விலாசிய ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடியில் மது அருந்திவிட்டு காவல் உதவி ஆய்வாளரை, அடித்து விலாசிய ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செல்வராஜ். இவர், திங்கள்கிழமை மாலை ரோல்கால் என அழைக்கப்படும் வழக்கமானப் பணிக்கு மற்ற காவலர்களை அழைத்துள்ளார்.

அப்போது, இதில், கலந்து கொண்ட ஆயுதப்படை பிரிவு காவலர் சுரேஷ் திடீரென செல்வராஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், செல்வராஜை அடித்து விலாசியுள்ளார்.

இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் செல்வராஜ் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், “பணிக்கு வந்த காவலர் சுரேஷ், மது அருந்தி இருந்ததாகவும், தகாத வார்த்தைகளில் பேசியபடி அடித்ததாகவும்” அவர் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து ஆயுதப்படை காவலர் சுரேஷை கைது செய்தனர்.

காயமடைந்த உதவி ஆய்வாளர் செல்வராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

NewsFast Logo