சசிகலாவுக்கு எதிராக களமிறங்கிய அதிமுக முன்னாள் நிர்வாகிகள்… - NewsFast
NewsFast Logo

சசிகலாவுக்கு எதிராக களமிறங்கிய அதிமுக முன்னாள் நிர்வாகிகள்…

சசிகலாவின் தலைமையை ஏற்றுக் கொள்ளாத அதிமுக முன்னாள் நிர்வாகிகள் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர்.

ஈரோடு:

சசிகலாவின் தலைமையை ஏற்றுக் கொள்ளாத அதிமுக முன்னாள் நிர்வாகிகள் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் புதிய கட்சியை ஒன்றைத் துவங்கினர்.

அதற்கான நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, “எம்.ஜி.ஆர் ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” என்று கட்சிக்கு பெயரும், கட்சியின் சின்னமாக “இரட்டை ரோஜாவும்” அறிவிக்கப்பட்டது.

மேலும், கட்சியின் கொடியாக ஏற்கனவே உள்ள அதிமுக கொடியில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களுடன் புதிய கொடி வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக முன்னாள் நிர்வாகிகளும், அவர்களுக்கு ஆதரவுத் தெரிவித்து மக்களும் கலந்து கொண்டனர்.

NewsFast Logo