ஆளுநர் மாளிகை பார்வையிட கட்டணம் ரூ.25..! அவர்களே காரில் அழைத்து செல்லும் வசதி..! - NewsFast
NewsFast Logo

ஆளுநர் மாளிகை பார்வையிட கட்டணம் ரூ.25..! அவர்களே காரில் அழைத்து செல்லும் வசதி..!

ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிட ஒரு  சிறப்பு வசதியை ஆளுநர் வித்யாசாகர் ராவ்  தொடங்கி வைத்துள்ளார்.

ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிட ஒரு  சிறப்பு வசதியை ஆளுநர் வித்யாசாகர் ராவ்  தொடங்கி வைத்துள்ளார்.

அதன் படி, ஆளுநர்  மாளிகையை பார்வையிட விரும்பும் பொதுமக்களின் வசதிக்கேற்ப பேட்டரி கார்  மூலம்  அவர்களை உள் அழைத்து வந்து பார்வையிடும் வசதியை ஆளுநர் அறிமுகம் செய்துள்ளார்.

இதற்காக குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த விழாவில் இதனை அறிமுகம் செய்து வைத்தார் ஆளுநர்    வித்யாசாகர்ராவ். அதாவது நாட்டிலேயே,  குடியரசுத் தலைவர் மாளிகையின் ஒரு பகுதி மற்றும் மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையை மட்டுமே  இதற்கு முன்னதாக பொதுமக்கள் பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வரிசையில் தற்போது  தமிழக ஆளுநர் மாளிகையும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை  தொடர்ந்து ஆளுநர் மாளிகையை பார்வையிட விரும்பும் பொதுமக்கள்,முதலில் ஆன்லைனில்“ www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

 நாள் மற்றும் நேரம்

வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6.30 மணிவரை  மட்டுமே பொதுமக்கள்  பார்வையிட முடியும்

எப்படி உட்செல்வது?

மாளிகையை பார்வையிட வரும் பொதுமக்கள், ராஜ்பவன் அனுமதி சீட்டு, அசல் அடையாள சான்று  போன்றவற்றை எடுத்து வர வேண்டும், பின்னர், பேட்டரியால் இயங்கக்கூடிய கார் மூலம், புல்வெளி பகுதி, மான்கள் உலவும் பகுதி, தர்பார் அரங்கம், மூலிகை வனம் உள்ளிட்ட 12 பகுதிகளுக்கு அழைத்துச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

English Summary

25 rs ticket for visting raj bhavan

NewsFast Logo