Asianet News TamilAsianet News Tamil

டெங்கு பற்றிய மிகப்பெரிய கட்டுக்கதை - ஒருவருக்கு ஒரே முறை மட்டும் தான் டெங்கு பாதிக்கும்..!

DEN-1, DEN-2, DEN-3, மற்றும் DEN-4 என டெங்குவை ஏற்படுத்தும் 4 வகையான வைரஸ் உள்ளது. இதனை சீரோடைப்ஸ் என அழைக்கலாம்.

the biggest myth about dengue you can only get dengue once
Author
Chennai, First Published Oct 23, 2019, 2:07 PM IST

டெங்கு பற்றிய மிகப்பெரிய கட்டுக்கதை - ஒருவருக்கு ஒரே முறை மட்டும் தான் டெங்கு பாதிக்கும்

எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக தெரிந்துக்கொள்ளவில்லை என்றால், அந்த ஒரு  குறிப்பிட்ட சப்ஜக்ட் பற்றின அறிதல் முழுமையாக இருக்காது. இது டெங்கு போன்ற நோய்களுக்கும் பொருந்தும். சமீப காலங்களில் இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் இன்னும் சில தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் உள்ளது. அதாவது ஒரே ஒரு வகை டெங்கு வைரஸ் மட்டுமே உள்ளது; ஒருவருக்கு ஒருமுறை டெங்கு வந்தால், மீண்டும் அவர்கள் வாழ்நாளில் டெங்கு பாதிப்பு ஏற்படாது என கருதுகின்றனர். இது முற்றிலும் தவறானது.

the biggest myth about dengue you can only get dengue once

DEN-1, DEN-2, DEN-3, மற்றும் DEN-4 என டெங்குவை ஏற்படுத்தும் 4 வகையான வைரஸ் உள்ளது. இதனை சீரோடைப்ஸ் என அழைக்கலாம். முதல் முறையாக டெங்கு சீரோடைப்பால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பிறகு, அதிலிருந்து  அடுத்த 3 மாதங்களுக்கு மற்ற சீரோடைப்பால் பாதிக்காத வகையில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்.

the biggest myth about dengue you can only get dengue once

ஆனால், 3 மாதங்களை கடந்த பின்னர் இந்த எதிர்ப்பு சக்தி இருக்காது. அதன் பின் மீதமுள்ள 3 சீரோடைப்பில் ஏதாவது ஒன்று மீண்டும் தாக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு தாக்கினால்,டெங்குவால் முன்பு ஏற்பட்ட பாதிப்பை விட மிகவும் கடுமையாக தாக்க வாய்ப்பு உள்ளது. இது அபாயகரமான ஒன்றும் கூட.

the biggest myth about dengue you can only get dengue once

ஆகவே, டெங்கு என்பது ஒருவரின் வாழ்நாளில்  ஒரு முறை தாக்கினால் மீண்டும் வராது என நினைப்பது தவறான ஒன்று. கடந்த காலங்களில் ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்டவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது ஒரே ஒரு கொசு கூட டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய சவாலாக அமையும் என்பதை நாம் உணர்தல் வேண்டும்

Follow Us:
Download App:
  • android
  • ios