Asianet News TamilAsianet News Tamil

அசைவ பிரியர்களே..! 18 ஆம் தேதி முதல் கடல் உணவு திருவிழா...சப்பிட தயாராக இருங்க..!

 மீன்வளத் துறையின் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 18-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு உணவு திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

sea food fesitival is going to start on 18th of cot 2019
Author
Chennai, First Published Oct 16, 2019, 2:18 PM IST

அசைவ பிரியர்களே..! 18 ஆம்  தேதி முதல் கடல் உணவு திருவிழா...சப்பிட தயாராக இருங்க..!   

வரும் 18-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கடல் உணவு திருவிழா சென்னையில் நடைபெற உள்ளது

இதற்கு முன்னதாக தீவுத்திடலில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக "மதராசபட்டினம் விருந்து; "வாங்க ரசிக்கலாம்-ருசிக்கலாம்" என்ற தலைப்பின்கீழ் உணவு திருவிழா நடைபெற்றது. இதில் 50 லட்சம் மதிப்பில் உணவுப்பொருட்கள் விற்பனையானது. 

கிட்டத்தட்ட 1.25 லட்சம் பேர் இந்த உணவு திருவிழாவில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மக்கள் மத்தியில் உணவு திருவிழா நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து மீன்வளத் துறையின் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 18-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு உணவு திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உணவுத் திருவிழாவில் 20க்கும் மேற்பட்ட ஸ்டால் அமைக்கப்பட உள்ளது. இந்த ஸ்டாலின் ஸீ ஃபுட்ஸ் அதாவது கடல் உணவுப் பொருட்கள். மீன், சுறா, இறால் வகைகள் உள்ளிட்ட பல்வேறு ஸீ ஃபுட்ஸ் கிடைக்கும். இந்த உணவுத் திருவிழாவை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இலவசமாக சென்று பார்க்கலாம்.

sea food fesitival is going to start on 18th of cot 2019

நமக்கு பிடித்த உணவுகளை வாங்கி கொள்ளலாம். பொதுவாக கடல் உணவுகள் அதிக புரதச்சத்து கொண்டது. எனவே உடலுக்கு நன்மை பயக்கும். புரதச்சத்து நிறைந்த ஸீ புட்ஸ் உண்பதற்கு ஏதுவாக இந்த உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதனை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் விதவிதமான உணவு வகைகள் மற்றும் அசைவ பிரியர்கள் உணவு விரும்பிகள் அனைவருக்கும் இந்த உணவு திருவிழா பயனுள்ளதாக அமையும். சென்னையில் முதன்முறையாக உணவுத் திருவிழா நடைபெற உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios