Asianet News TamilAsianet News Tamil

டிக்-டாக் கிற்கு செம்ம ஆப்பு..! விரைவில் தமிழகத்தில் தடை..!

டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ததகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
 

restriction for tik tok app in tamilnadu
Author
Chennai, First Published Feb 12, 2019, 3:49 PM IST

டிக்-டாக் கிற்கு செம்ம ஆப்பு..! 

டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ததகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

டிக் டாக் செயலி தற்போது இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் சவாலாக உள்ளது. இந்த செயலி பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களை ஒரு கதாநாயகன் கதாநாயகி என நினைத்து கொள்ளும் அளவிற்கு புகுந்து விளையாடுகிறாரகள். இதெல்லாம் ஒரு பக்கம்  இருக்க, எல்லை மீறிய காட்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

restriction for tik tok app in tamilnadu

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள இந்த டிக் டாக் செயலியில் இல்லாததே இல்லை என்ற அளவிற்கு டைம் பாஸ் செய்கின்றனர் நம் இளைஞர்கள். இவர்களுக்கு நேரம் செல்வதும் தெரியாது..வேளையில் கவனம் இருக்காது.. ஏன் சாப்பிட கூட தோணாது..அந்த அளவிற்கு இதுலயே ஊறி உள்ளனர். இந்த நிலையில், டிக் டாக் செயலியை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் மனித நேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமூன் அன்சாரி கோரிக்கை வைத்தார்.

restriction for tik tok app in tamilnadu
 
இதற்கு பதில் அளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ப்ளூ வேல் விளையாட்டு எப்படி மத்திய அரசு தலையிட்டு தடை செய்ததோ அதேபோல் டிக் டாக் ஆப் தடை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

மேலும் இந்த டிக் டாக் செயலியின் சர்வர் ரஷ்ய நாட்டில் செயல்படுவதால் மத்திய அரசிடம் இது தடை செய்வது குறித்து வலியுறுத்தப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.ஆக மொத்தத்தில் விரைவில் டிக் டாக்கிற்கு ஆப்பு ரெடி..! 
 

Follow Us:
Download App:
  • android
  • ios