Asianet News TamilAsianet News Tamil

"Go Back Modi" சொன்னது தமிழர்கள் அல்ல.. யார் அந்த கும்பல் தெரியுமா..?

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தாலே, go back modi என்ற வசனம் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் வரும். 

Pakistan promoted go back modi in social network
Author
Chennai, First Published Mar 6, 2019, 3:34 PM IST

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தாலே go பாசக் modi என்ற வசனம் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் வரும். அதுமட்டுமா...? சொல்லி வைத்த மாதிரியே அன்றைய தினத்தில்... ஒரே நேரத்தில் இந்த வசனம் ட்ரெண்டிங்கில் கொண்டு வர பலரும் இதற்காகவே ரீட்வீட் செய்து, சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு அதனை பெரிதாக்குவார்கள்...

அதன் மீதான விமர்சனத்தை மக்கள் மத்தியில் கொண்டு வருவார்கள்.ஆனால் மக்கள் என்னமோ மோடி இவ்வளவு நல்லது  செய்யும் பொது, ஏன் இப்படி பதிவிடுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பியது. இதற்கிடையில் தான் இது தொடர்பாக, புத்தக பதிப்பாளர் ரங்கநாதன் என்பவர் ட்விட்டர் பதிவை ஆய்வு செய்து அதன் படி, ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டு உள்ளார்.

Pakistan promoted go back modi in social network

இந்த தகவல் படி, 58 சதவீத மக்கள் பாகிஸ்தானில் இருந்தும்,28 சதவீத மக்கள் மற்ற நாடுகளில் இருந்தும்,வெறும் 4 சதவீதம் மட்டும் சென்னையில் இருந்தும் பதிவு செய்து உள்ளனர் 

அதில் குறிப்பாக,ஆங்கிலத்தில் மட்டும் 62 சதவீதமும், 23 சதவீதம் உருதுவிலும், 6 சதவீதம் தெலுங்கிலும், 4 சதவீதம் சோமாலிய மொழியிலும், 2 தமிழில் சதவீதம் மட்டுமே பதிவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஆக மொத்தத்தில், மோடிக்கு எதிரான கோஷத்தை எழுப்புவது தமிழகம் அல்ல. மோடியின் வல்லமையை பார்த்து உலக நாடிகளில் சில நாடுகள் செய்யும் தந்திரவேலை என்றும், அதில் முக்கிய பங்கு பாகிஸ்தானுக்கு உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios