Asianet News TamilAsianet News Tamil

ரயில் சேவையில் அடுத்த அதிரடி திட்டத்தை தொடங்கிய மத்திய அரசு...!

ரயில் தொடர்பான அனைத்து விவரங்களையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் Rail Drishti என்ற புதிய இணையதளத்தை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கி வைத்தார்.

new website updation had done in railway dept
Author
Chennai, First Published Feb 25, 2019, 6:10 PM IST

ரயில் தொடர்பான அனைத்து விவரங்களையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் Rail Drishti என்ற புதிய இணையதளத்தை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கி வைத்தார். இதன் மூலம் ரயிலில் வழங்கப்படும் உணவுகள், தயாரிக்கும் சமையலறைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை அமர்ந்த இடத்திலிருந்தே ஆன்லைனில் பார்க்கலாம்.

new website updation had done in railway dept

அதுமட்டுமல்லாமல், ரயில் இயங்கி கொண்டிருக்கும் போதே, எந்த  இடத்தில் கிராஸ் செய்கிறோம், அடுத்து எந்த இடத்தில் நிறுத்தம் எவ்வளவு நேரம் நிறுத்தம் உள்ளிட்ட விவரங்களும் தெரிந்துகொள்ளலாம். அதே போன்று பொதுவாகவே அவ்வப்போது எழக்கூடிய மிக பெரிய பிரச்னையான ரயிலில் வழங்கக்கூடிய உணவு தூய்மையான முறையில் இல்லை என்பதே....

பயணிகளின் இந்த குமுறலுக்கு பதில் கிடைக்கும் வண்ணம் மற்றும் அது குறித்த சந்தேகங்களை போக்கும் வண்ணம் சமையல் அறையில் கேமரா வைக்கப்பட்டு அதனை லைவாக பார்த்துக்கொள்ளும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், கிச்சனில் நாடாகும் அனைத்து காட்சிகளையும் பயணிகள் நேரடியாகவே பார்த்துக்கொள்ளலாம். பயணிகளுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் செய்து தர ரயில்வே நிர்வாகம் எடுத்து வைத்துள்ள அடுத்த ஸ்டேப் இதுதான்.

Follow Us:
Download App:
  • android
  • ios