Asianet News TamilAsianet News Tamil

திருச்சியில் பிரம்மாண்ட இஸ்லாம் மாநாடு... மலேசிய, சிங்கப்பூர் மக்களும் பங்கேற்பு..!

திருச்சியில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட மாநாட்டில் சவுதி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்றுள்ளனர். 

Muslim Conference in Trichy
Author
Tamil Nadu, First Published Jan 27, 2019, 3:38 PM IST

திருச்சியில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட மாநாட்டில் சவுதி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்றுள்ளனர்.

 Muslim Conference in Trichy

நேற்று தொடங்கிய இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, டெல்லி, பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, சவுதி அரேபியா, மலேசிய, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்துள்ளனர்.Muslim Conference in Trichy

அதனைத் தொடர்ந்து இன்று காலை மாநாட்டு திடலில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு எளிய முறையில் சுன்னத் திருமணம் நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வட மற்றும் தென் மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் இனாம்குளத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்வதால் ரெயில் மூலமும் அதிக அளவில் முஸ்லிம்கள் வந்தவண்ணம் உள்ளனர். 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Muslim Conference in Trichy

இந்நிலையில், திருச்சி இஜ்திமாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த முதியவர் இலியாஸ்கான் உயிரிழந்தார். இந்த இஜ்திமா மாநாட்டில் திங்கட்கிழமை உலக நாடுகளில் அமைதி, நல்லிணக்கத்திற்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios