Asianet News TamilAsianet News Tamil

இனிக்க இனிக்க ஒரு திருமண வாழ்வு வேண்டுமா? இதை படிங்க முதல்ல!

முன்னதாக ஒருவரை காதலித்திருந்தாலோ அல்லது காதலன் / கணவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கருத்துக்கள் கொண்டிருந்தாலோ அதை துணையுடன் ஒப்பிடவேண்டாம். ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடுவது தேவையற்ற சண்டைகளையும், உறவில் விரிசலையும் உருவாக்கும்.

Marrige life Sweet...
Author
Chennai, First Published Oct 31, 2018, 1:48 PM IST

முன்னதாக ஒருவரை காதலித்திருந்தாலோ அல்லது காதலன் / கணவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கருத்துக்கள் கொண்டிருந்தாலோ அதை துணையுடன் ஒப்பிடவேண்டாம். ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடுவது தேவையற்ற சண்டைகளையும், உறவில் விரிசலையும் உருவாக்கும்.

அச்சம், பாதுகாப்பின்மை பற்றி பேசுங்க...

எது குறித்து அச்சப்படுகிறீர்கள், எந்தெந்த விஷயங்கள் பாதுகாப்பின்மையாக உணர செய்கிறது என துணையுடன் பேசி தீர்த்துக் கொள்வது இருவர் மத்தியில் கருத்து வேறுபாடு அல்லது தவறான புரிதல்களை தடுக்கும்.

மகிழ்ச்சியாக இருக்க...

உறவில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் செயலை செய்யத் தயங்க வேண்டாம். உங்கள் செயல் ஒன்றை துணை விரும்புகிறார் என்றால், அது அவருக்கு போரடிக்காமல் எப்படி எல்லாம் செய்ய முடியுமோ அப்படிச் செய்வது ஒருவர் மேல் ஒருவர் ஈர்ப்பு குறையாமல் இருக்க உதவும்.

சமூக தளத்தோடு மதிப்பிட வேண்டாம்...

துணையின் சமூக தளப் பதிவுகளைக் கொண்டு அவரை ஒப்பிட வேண்டாம். லைக்ஸ் வாங்க கூட ஏதேனும் பதிவிடப்படலாம். சோஷியல் மீடியா எனும் மாய உலகை நிஜ உலகுடன் ஒப்பிடுவது தவறானது

வாய் திறக்கவும்..

உங்கள் துணை பேசும் ஏதேனும் ஒன்று உங்களுக்கு பிடிக்கவில்லை அல்லது அசவுகரியமாக உணரச் செய்தால் அதை வெளிப்படையாக தெரிவிக்கலாம். அப்போது நீங்கள் உணர்வு ரீதியாக பாதிக்கப்படுவதை அவர் அறிந்து கொள்ள முடியும்.

சௌகரியமாக உணர வைங்க...

தினமும் குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது உங்களால், நீங்கள் செய்த செயலால் உங்கள் துணை சௌகரியமாக அல்லது சந்தோசமாக உணர வேண்டும்.

மனதை படிக்க...

சிலர் தாங்கள் நினைப்பதை தங்கள் துணை சரியாக கண்டறிய வேண்டும் என்று எண்ணுவார்கள். இது தவறான அணுகுமுறை. நீங்கள் நினைப்பதை எல்லாம் துணை கண்டறிந்து விட்டால் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது. நீங்கள் புதிராகவும் இருக்க வேண்டும். அவர் அந்த புதிரை அவிழ்ப்பதுதான சுவாரஸ்யம்.

முடிவை நம்புங்க...

துணை ஒரு முடிவு எடுத்து அது சரியாக வரும் என்று கூறுகிறார் என்றால் அதை நம்புங்கள். சரியாக நடந்தால் அவரது தன்னம்பிக்கை உயரும். தோல்வி அடைந்தால் இனி கலந்தாலோசித்து முடிவு எடுக்கலாம் என்ற எண்ணம் வளரும். இரண்டுமே உங்களுக்கு சாதகம் தான்.

சண்டை, சமாதானம்!

ஒருவர் மீது ஒருவர் அதீத காதல் கொண்டிருந்தால், அந்த காதலின் காரணமாக கூட சண்டை வரும். ஆனால் சண்டைக்குப் பின் சமாதானம் வேண்டும். ஈகோவுடன்... நான் பெரிதா, நீ பெரிதா என்று முகத்தை திருப்பிக் கொண்டு செல்ல கூடாது. மறக்கவும், மன்னிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.

எதிர்காலம்!

இன்றைய சேமிப்பை எதிர்காலத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்பதில் தொடங்கி பிள்ளை பெறுவது முதல் வளர்ப்பது வரை அனைத்துக்கும் எதிர்கால திட்டங்கள் அவசியம்.

சுயம்!

உறவில் நம்பிக்கை மிகவும் அவசியம். நம்பிக்கை இழந்துவிட்டால் உறவை இழந்துவிடுவோம். ஒருவரை ஒருவரை நம்புதல் இருவரையும் மேலோங்க செய்யும். நம்பிக்கை இல்லை என்றால் பாதுகாப்பின்மை பிறக்கும். பாதுகாப்பின்மை இல்லாத உணர்வு, உறவை சிதைக்கும். எனவே, நம்புங்க!

Follow Us:
Download App:
  • android
  • ios