Asianet News TamilAsianet News Tamil

உண்மை வெளிவந்தது....வசமா மாட்டிக்கொண்டார் கார்த்தி சிதம்பரம்...!

DAY SCREEN என்ற நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினர் வீடியோ ஷூட் செய்ய தயாரான போது எடுக்கப்பட்டு உள்ளது. இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு 2005 என்பது  குறிப்பிடத்தக்கது.

karti chidambaram tweeted a modi photo and described as jaisri ram
Author
Chennai, First Published Oct 14, 2019, 4:41 PM IST

உண்மை வெளிவந்தது....வசமா மாட்டிக்கொண்டார் கார்த்தி சிதம்பரம்...! 

சீன அதிபரை மாமல்லபுரத்தில் சந்தித்த பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை கோவளத்தில் தங்கி இருந்தார்.

அப்போது ஓட்டலின் பின்புறமாக உள்ள கடற்கரையில் காலை நேரத்தில் பயிற்சி நடைபயிற்சி சென்ற போது அங்கே உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினார். அந்த குப்பையை அங்கிருந்த ஓட்டல் ஊழியரிடம் கொடுத்து, நம்முடைய இடத்தை நாம் தான் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்  என உற்ச்சாகப்படுத்தி பேசி உள்ளார். 

பின்னர் குப்பை அகற்றுவது குறித்த வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவெற்றி, நம்மை சுற்றி உள்ள நாம் தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த மக்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பாராட்டியும் அதேசமயத்தில் ஒரு சிலர் குறை கூறியும் கிண்டல் செய்தும் பதிவிட்டு வந்தனர்.

 

அந்த வகையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மோடி குப்பை அகற்றுவது திட்டமிட்ட ஒன்று என குறிப்பிட்டு அது தொடர்பான மோடி போட்டோ மற்றும் வீடியோ எடுக்க தயாராக ஒரு கூட்டம் காத்திருப்பது போன்ற ஒரு போட்டோவையும் பதிவிட்டு ஜெய்ஸ்ரீராம் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு அவருடைய ஆதரவாளர்கள் லைக் செய்தும் ரீட்வீட் செய்தும் இருந்தனர்.

இந்த நிலையில் இந்த புகைப்படம் உண்மைதானா என பலரும் ஆராய தொடங்கிவிட்டனர். ஆராய்ந்து பார்த்ததில் இந்த புகைப்படம் ஸ்காட்லாந்தில் உள்ள வெஸ்ட் சாண்ட்ஸ் என்ற கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரியவந்துள்ளது.
 
மேலும், DAY SCREEN என்ற நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினர் வீடியோ ஷூட் செய்ய தயாரான போது எடுக்கப்பட்டு உள்ளது. இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு 2005 என்பது  குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டோ தவறு என உணர்ந்த  கார்த்தி சிதம்பரம்... தவறான போட்டோ பதிவிட்டு இருப்பதாகவும், மேலும் போட்டோ தவறாக இருந்தாலும், உண்மையில் இப்படி தான் மோடி குப்பையை அகற்றும் போது எடுக்கப்பட்டிருக்கும் என ட்வீட் செய்து உள்ளார்.

இது குறித்து மோடி ஆதரவாளர்கள் கார்த்தி சிதம்பரத்திற்கு கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios