Asianet News TamilAsianet News Tamil

ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஜெசிகா..! 33 ஆண்டுகளுக்கு பின்... வெளிவந்த அதிர்ச்சி பின்னணி ..!

1987 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ரீபா என்ற பெண்மணிக்கு  ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜெசிக்கா என பெயரிட்டனர். 

Jessica rescued from borewell in america
Author
Chennai, First Published Oct 31, 2019, 1:37 PM IST

ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஜெசிகா..! 33 ஆண்டுகளுக்கு பின்... வெளிவந்த அதிர்ச்சி பின்னணி ..! 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சுமார் 33 வருடங்களுக்கு முன்னர் ஜெசிக்கா என்ற 18 மாத குழந்தை தவறுதலாக விழுந்து பெரும் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்ட வெற்றிபயணம் பற்றி தான் இப்போது இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

1987 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ரீபா என்ற பெண்மணிக்கு  ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜெசிக்கா என பெயரிட்டனர். 18 மாதம் நிரம்பிய ஜெசிக்கா தனது பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தாய் ரீபாவிற்கு போன் கால் வந்துள்ளது. போன் எடுக்க சென்ற சமயத்தில் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார் ஜெசிக்கா.

Jessica rescued from borewell in america

பின்னர் திடீரென குழந்தை மாயமானதை தொடர்ந்து அங்குமிங்கும் பதறி தேடிக்கொண்டிருந்த தாயின் காதில் விழுந்தது குழந்தையின் அழுகுரல். எங்கே குழந்தை அழுகிறது என ஓடோடி பதற்றமாய் தேடிப் பார்க்கும் போது அதிர்ச்சி தரும் விதமாக அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். பின்னர் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த மீட்பு குழுவினர் தீவிரமாக முயற்சி செய்து 45 மணி நேர போராட்டத்துக்கு பின் ஜெசிக்காவை மீட்டனர். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான அனைத்து சிகிச்சையும் அளிக்கப்பட்டு சில மாதங்கள் மருத்துவமனையில் தங்கியிருந்த ஜெசிக்காவிற்கு  15 சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது நலமுடன் இருக்கிறார்.

Jessica rescued from borewell in america

அவருக்கு திருமணமாகி ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இவர் அமெரிக்காவின் செல்ல மகள் என்றும் அழைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இதில் மிக முக்கியமாக உற்றுநோக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் திருச்சி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் மரணம் ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே ஒருவிதமான சங்கடத்தை சந்திக்க வைத்தது என்றே சொல்லலாம். இருந்தாலும் அமெரிக்காவை பொருத்தவரை ஆழ்துளை கிணற்றில் விழுந்த கடைசி குழந்தை ஜெசிக்கா என்ற ஒரு முத்திரை பதியப்பட்டுள்ளது. இதுநாள்வரை அந்த நிகழ்வுக்கு பின் வேறு எந்த குழந்தையும் ஆழ்துளை கிணற்றில் விழாதபடி இரும்பு மூடிக்கொண்டு பாதுக்காப்பாக மூடப்பட்டு உள்ளது.

Jessica rescued from borewell in america

ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இதுபோன்ற மாற்றங்கள் நடைபெறுமா ? இனியாவது ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் நிகழ்வு நடைபெறாமல் இருக்குமா என்ற பல்வேறு கேள்விகளுடன் முடிகிறது இந்த பதிவு.

Follow Us:
Download App:
  • android
  • ios