Asianet News TamilAsianet News Tamil

நம்ப குடும்பம் நல்ல குடும்பமா ? இந்த "10"உம் இல்லையென்றால்....

how to live as happy family follow this key points
how to live as happy family follow this key points
Author
First Published Oct 16, 2017, 12:25 PM IST


நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள் !

ஒரு  குடும்பத்தில்  எது இருக்கோ இல்லையோ  நிம்மதி  மட்டும்  கண்டிப்பாக  இருக்க  வேண்டும். நாம்  வாழும்  வீட்டில்  அமைதி  நிலவினால்   தான்  நமக்கு தேவையான அனைத்தும்  கிடைக்கும்.

 எப்பொழுதுமே  நம் வீட்டில் ஒரு அமைதியான சூழல் நிலவினால் தான், நம்மை  சுற்றி வாழ்பவர்கள் கூட  அமைதியான  வாழ்க்கை வாழ முடியும்.

பாசிடிவ் வைப்ரேஷன் கேள்விபட்டிருப்பீர்கள் அல்லவா? அதாவது   நல்ல எண்ணங்கள் இருக்க  வேண்டும்... நல்ல வார்த்தையை  பேசி   பழக வேண்டும்... நல்ல செயலையே  செய்து வர  வேண்டும் .... இது போன்று  நம்  எண்ணமும்   நம்  எண்ணத்திற்கு  ஏற்ப  வீட்டில்  அமைதி நிலவினால்  தான், வாழ்கையில் ஒரு முனேற்ற பாதையில் செல்ல  முடியும். அந்த  குடும்பம் தான்  நல்லதொரு குடும்பமாக  இந்த  சமுதாயத்தில்  தலை  நிமிர்ந்து  நடப்பர்.

how to live as happy family follow this key points

இது  போல  வாழ்வதற்கு  பத்து  முக்கிய  பாய்ன்ட் உள்ளது  தெரியுமா....

1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன் படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2. கணவன் - மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத் தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை குலைக்கும்.

5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் அங்கே தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றையும் கடைப் பிடித்து வர வேண்டும்.

8. பிறர் குற்றத்தைப் பெரிது படுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.

9. தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.

 மேற்குறிப்பிட்ட  அனைத்தும், தனி  ஒரு நபருக்கும்  தேவை, வீட்டில்  உள்ள  ஒவ்வொருவருக்கும்  தேவை  தான்  என்பதை  நாம் நன்றாக புரிந்துக் கொண்டால், இனி  வாழ்வில் எந்த துயரமும் இன்றி  நன்  மக்களாக , நல்லதொரு குடும்பமாக  வாழலாம்  என்பதில் எந்த  மாற்று   கருத்தும் இருக்காது

Follow Us:
Download App:
  • android
  • ios