Asianet News TamilAsianet News Tamil

மீன் முள்ளை இனி தூக்கி போட்டுடாதீங்க! உங்களுக்கு இப்படி ஒரு நிலை வேண்டாம்!

மீன் என்றதுமே பலருக்கு நாவில் எச்சில் ஊரும்... அந்த அளவிற்கு மீன் வகை உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள் பலர். இப்படி மீன் சாப்பிடும் உணவு ரசிகர்களிடம் எந்த மீன் சுவை எப்படி இருக்கும் என கேட்டல் அவர்கள் விவரித்து சொல்லும் அழகே தனி. எப்படி சமைத்தால் என்ன டேஸ்ட் கிடைக்கும் என கூட அடிஷ்னல் டிப்ஸ் கூட தருவார்கள்.

fish bone is help to calcium increase your body
Author
Chennai, First Published Oct 27, 2018, 6:21 PM IST

மீன் என்றதுமே பலருக்கு நாவில் எச்சில் ஊரும்... அந்த அளவிற்கு மீன் வகை உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள் பலர். இப்படி மீன் சாப்பிடும் உணவு ரசிகர்களிடம் எந்த மீன் சுவை எப்படி இருக்கும் என கேட்டல் அவர்கள் விவரித்து சொல்லும் அழகே தனி. எப்படி சமைத்தால் என்ன டேஸ்ட் கிடைக்கும் என கூட அடிஷ்னல் டிப்ஸ் கூட தருவார்கள். 

fish bone is help to calcium increase your body

சரி மீன் ரசிகர்களை விடுங்க... பொதுவாகவே மீன் சாப்பிடுபவர்கள் மீனின் சதையை மட்டும் தின்று விட்டு அதன் எலும்பு பகுதி அதாவது முள்ளை தூக்கி போடுவது தானே வழக்கம். அப்படி செய்யாமல் மிகவும் மெல்லியதாக கடித்து மெல்லலாம் என்கிற பக்குவத்தில் உள்ள முள்ளை சாப்பிட்டால் உங்கள் எலும்புகள் வலுப்பெறுமாம். 
 
மனிதனின் உடலில் குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு தானாகவே எலும்புகளில் உள்ள சத்து குறைய துவங்கும். குறிப்பாக பெண்களுக்கு 30  வயதை கடந்ததும் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்து கொள்வது அவசியம்.

fish bone is help to calcium increase your body

பாலுடன் ஒப்பிடுகையில் எலும்புகளில் தான் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இதனால் மீன் முள்ளில் அதிகம் கால்சியம் இருக்கிறது. மேலும் சால்மன் மற்றும் சார்டின் வகை மீன்கள் கால்சியம் சத்தில் முதல் இடம் பிடிக்கிறது.

50 கிராம் சார்டின் உண்பதால் 340 மிகி அளவு கால்சியம் கிடைக்கிறது. 85 கிராம் சால்மன் மீன் உண்பதால் 241 மிகே இ அளவு கால்சியம் சத்து கிடைக்கிறது. கால்சியம் சத்து எலும்புகளையும் பற்களையும் வலிமையாக்குவதற்கு தேவைப்படுகின்றன.

fish bone is help to calcium increase your body

தசைகள் விரியும் திறன், இரத்தம் உரைதல், நரம்புகளுக்கு செய்திகளை கடத்துதல் போன்றவற்றிக்கு கால்சியம் இன்றியமையாததாகும். மேலும் நமது உடலில் இருக்கும் நகம், முடி, சிறுநீர், மலம், வியர்வை போன்றவற்றால் தினமும் கால்சியம் சத்து வெளியேறி கொண்டே இருக்கிறது.

ஆகவே அதிக அளவு கால்சியத்தை உட்கொள்ளும்போது தான் உடலின் இயக்கம் சீராக இருக்கும் என்பதை உணர்ந்து, மீன் பிரியராக இருந்தாலும், சாதாரணமாக மீன் உண்பவராக இருந்தாலும் குத்தும் தன்மை இல்லாத, நன்கு எண்ணையில் பொரித்த மீன் முள்ளாக இருந்தால் அதையும் உண்பது உகந்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios