Asianet News TamilAsianet News Tamil

சாப்பிட்டவுடன் மறந்தும் இதை மட்டும் செய்யாதீங்க...!

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம்.
 

dont do this after taking your food
Author
Chennai, First Published Jan 23, 2019, 6:54 PM IST

சாபிட்டவுடன் மறந்தும் இதை மட்டும் செய்யாதீங்க...! 

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு தெரியுமா? 

சாப்பிட்ட உடன் பழங்களை சாப்பிட கூடாது..! 

வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்திற்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

டீ குடிப்பது..! 

தேயிலை அதிக அளவு உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும். 

புகை பிடிக்கக்கூடாது. 

உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட் 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

இடுப்பு பெல்ட்டை தளர்த்த கூடாது..! 

சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட் இறக்கி விடுவார்கள் அல்லது தளர்ந்துவிடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக உடலுக்குள் சென்று விடுவதால் சரியானபடி வேலை செய்யமுடியாமல் செரிமான கோளாறு ஏற்படும்.

குளிக்கக் கூடாது

சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்கத் தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவு செரிமானத்தை குறைக்கின்றன. 

dont do this after taking your food

உடனே நடக்க கூடாது ஏன் ?

சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும் இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.

சாப்பிட்டதும் தூங்கக்கூடாது

சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும், நோய் கிருமிகளையும் வர வைக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios