Asianet News TamilAsianet News Tamil

சூடு பிடிக்கும் " செம்பு வாட்டர் பாட்டில்"..! இதில் இப்படி ஒரு அற்புதம் என்றால் யார் தான் வாங்க மாட்டார்கள்..!

அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ நாடே நவீன மயமாகிவிட்டதால் கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.

copper water water bottle sales getting high due to its benefits
Author
Chennai, First Published Jan 25, 2019, 4:12 PM IST

சூடு பிடிக்கும் "தாமிர வாட்டர் பாட்டில்"..! 

அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ நாடே நவீன மயமாகிவிட்டதால் கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.

ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும் அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும் மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீரை செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா?  செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்பதே..

copper water water bottle sales getting high due to its benefits

கிணத்துல கிடைக்கின்ற தண்ணி செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்.செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட நல்லது.மூணு நாளைக்கு ஒரு முறை செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா, பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம்.

அந்த காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள். தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பனை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம். தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை தரும்.

copper water water bottle sales getting high due to its benefits

ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா வாங்க பார்க்கலாம். இந்திய பண்பாட்டின் படி தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம் பித்தம் கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது.

அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால் உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும். எனவே தான் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும் என பலரும் தெரிவிக்கின்றனர். நல்ல விஷயதாகி நாமும் கடைப்பிடிக்கலாமே..! 

Follow Us:
Download App:
  • android
  • ios