Asianet News TamilAsianet News Tamil

டெங்குவை ஒழிக்க வேறு சில சிறந்த வழிகள் இதோ...!

மழை காலம் தொடங்கி விட்டாலே எங்கே டெங்கு வந்துவிடுமோ என்ற பயம் நம்மை அச்சுறுத்த தொடங்கிவிடுகிறது. 

best ways to control dengue
Author
Chennai, First Published Feb 5, 2019, 6:57 PM IST

டெங்குவை ஒழிக்க வேறு சில சிறந்த வழிகள் இதோ...!  

மழை காலம் தொடங்கி விட்டாலே எங்கே டெங்கு வந்துவிடுமோ என்ற பயம் நம்மை அச்சுறுத்த தொடங்கிவிடுகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வந்தாலும், மக்களாகிய நாமும் நம் வீட்டை சுற்றி தூய்மையாக வைத்துக் கொள்வதில் உள்ளது டெங்குவை தடுக்க மிக முக்கியமான வழி

இதற்கு முன்னதான பல்வேறு பதிவுகளில் வருவதற்கான காரணத்தையும் டெங்கு கொசுவை ஒழிக்க நம் வீட்டை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதையும் டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பது எப்படி என்பதையும், வீட்டிற்குள் மாலைநேரத்தில் கொசுக்கள் உள்ளே நுழையாமல் பார்த்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு விதமான விவரங்களை பார்த்தோம்.

best ways to control dengue

இதனையும் மீறி சில சமயத்தில் டெங்குவால் பாதிப்பு ஏற்படும் போது வேறு என்னென்ன சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வாசா குடுஜியாதி கஷாயம் - இந்த கஷாயம் ரத்தத்தில் உள்ள இரத்த தட்டணுக்களை அதிகரிக்க செய்து விடுகிறது. பொதுவாக டெங்குவால் பாதித்தால் டெங்கு வைரஸ் நம் ரத்தத்தில் உள்ள ரத்த அணுக்களை சிதைத்து விடும். ஆனால் இந்த கசாயத்தை எடுத்துக்கொண்டால் இரத்த அணுக்களை அதிகரிக்க செய்கிறது. இது மிக முக்கியமான கசாயமாக கருதப்படுகிறது. 

best ways to control dengue

இதற்கு அடுத்தபடியாக சுதர்சன சூரணம். இதனுடைய மூலப்பொருளே  நிலவேம்பு தான். மாத்திரை வடிவத்திலும் கிடைக்கும். மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும். சளி இருமல் போன்ற தொல்லையிலிருந்து விடுபட இந்த மருந்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக நிலவேம்பு கஷாயத்தை நம் வீட்டிலேயே தயார் படுத்தி எடுத்துக்கொள்ளலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரவர் உடல் எடைக்கு ஏற்ப வயதுக்கு ஏற்பவும் தேவையான அளவு நிலவேம்பு கஷாயத்தை தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் டெங்கு பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios