Asianet News TamilAsianet News Tamil

தாமிர பாட்டிலில் உள்ள தண்ணீரில் இப்படி ஒரு நன்மையா..? உடனே இதுக்கு மாறி பாருங்க...

தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது. தாமிரம் முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.

benefits of copper bottle water and its uses
Author
Chennai, First Published Jan 29, 2019, 1:23 PM IST

தாமிர பாட்டிலில் உள்ள தண்ணீரில் இப்படி ஒரு நன்மையா..? உடனே இதுக்கு மாறி பாருங்க...

தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது. தாமிரம் முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.

தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும். தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில் தாமிர குறைபாடு இருக்கையில் தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் இருக்கும். கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது.

benefits of copper bottle water and its uses

கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவும். வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும் இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும். மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்.

மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும் இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios