Asianet News TamilAsianet News Tamil

இன்று 1000 மடங்கு புண்ணியம் தரும் பானு சப்தமி…. விரதமிருந்து சூரியனை வழிபட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி அதாவது இன்று ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் தவறவிடக்கூடாத நாள். இன்று விரதமிருந்து சூரியனை வழிபட்டால் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படுபவர்களுக்கு நல்லது நடக்கும். காலையில் எழுந்து நதியில் நீராடி நித்திய பூஜை மற்றும் அபிஷேகம் செய்தால் நன்மைகள் பல வந்து சேரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன,.

banu sabdamy today
Author
Chennai, First Published Jan 13, 2019, 9:49 AM IST

பானு என்றால் சூரியன் என்று அர்த்தம். சூரியனுக்கு ஞாயிற்றுக் கிழமை உகந்த நாள். சப்தமி திதியும், ஞாயிற்றுக் கிழமையும் ஒன்றாக வரும் நாள் பானு  சப்தமி என்று அழைக்கப்படுகிறது. வெகு அபூர்வமாக வரும் பானு சப்தமி தினம் ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பானது என்று கூறப்படுகிறது.

banu sabdamy today

இந்த பானு சப்தமி நாளில் நாம் பித்ரு தர்ப்பணம் செயவது சூர்ய கிரகணம் முடிந்த விறகு நாம் செய்யும் தர்பணத்துக்கு சமமானது என்றும் சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த குறிப்பிட்ட நாளில் பித்ரு தர்பணம் செய்தால் நமது முன்னோர்களின் ஆசி அளவில்லாமல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இன்று ஆற்றில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்தல், தானம் செய்தல் போன்றவற்றின் மூலம் ஏரளமான நன்மைகளையும் பெறலாம் எனவும் கூறப்படுகிறது.

banu sabdamy today

இன்று விரதமிருந்து சூரியனை வழிபட்டால் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படுபவர்களுக்கு நல்லது நடக்கும். காலையில் எழுந்து நதியில் நீராடி நித்திய பூஜை மற்றும் அபிஷேகம் செய்தால் நன்மைகள் பல வந்து சேரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன,

13 ஜனவரி-2019-ஞாயிற்றுக் கிழமை, பானு சப்தமி தினம். தவறாமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டிய நாள். மிஸ் பண்ணிடாதீங்க…

Follow Us:
Download App:
  • android
  • ios