Asianet News TamilAsianet News Tamil

கருக்கலைப்புக்கு பின் உடலுறவு கொள்வது சரியா? தவறா?

கருக்கலைப்புக்குப் பின் உடலுறவு ஆபத்தானதா? அல்லது கருக்கலைப்புக்குப் பின் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும் என பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. அவற்றில் தெளிவு பெறத்தான் வேண்டும்.

Abortion after Sex...right? Wrong?
Author
Chennai, First Published Oct 30, 2018, 11:15 AM IST

கருக்கலைப்புக்குப் பின் உடலுறவு ஆபத்தானதா? அல்லது கருக்கலைப்புக்குப் பின் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும் என பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. அவற்றில் தெளிவு பெறத்தான் வேண்டும்.

கருக்கலைப்பு

2 விதமான கருக்கலைப்புகள் உள்ளன. மருந்துகள் மூலம் செய்யும் கருகலைப்பு மற்றும் அறுவை சிகிச்சை மூலமான கருக்கலைப்பு

அறுவை சிகிச்சையில் கர்ப்பபை வாயை திறந்து, கரு வெளியேற்றப்படும். அப்போது பென்சில் முனையை விட குறுகலான கருவறை வாயை பென்சில் அகலத்திற்கு திறக்க நேரிடும்" என்கின்றனர் மருத்துவர்கள் 

2 வாரங்கள்

மருந்து மூலமோ அல்லது அறுவை சிகிச்சையோ! கருக்கலைப்பிற்கு பின் 2 வாரம் வரை உடலுறவு கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். இருவிதமான கருகலைப்பு முறையிலும், இரத்தப்போக்கு மற்றும் தசைபிடிப்புகள் இருக்கும். எனவே, உடல்நிலை சீராக குறைந்தபட்சம் இரண்டு வாரம் தேவைப்படும்.

அறுவை சிகிச்சை முறையில், கர்ப்பப்பை வாய் திறக்கப்படுவதால் கூடுதலாக நோய்த் தொற்று அபாயமும் உள்ளது கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் பிறப்புறுப்பில் இருப்பதால் நோய்தொற்று ஏற்படும், அதனால் கருப்பை வாய் இயல்பு நிலையை அடையும் வரை கவனம் வேண்டும். வலி, இரத்தப்போக்கு, காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

கருத்தடை சாதனங்கள்

கருக்கலைப்புக்குப் பின் உடனடியாக மீண்டும் கருவுறவும் வாய்ப்பு உண்டு. "கருக்கலைப்புக்குப் பின் ஒரு மாதவிடாய் சுழற்சி முடிவடைவதால், 4 வாரத்தில் அடுத்த மாதவிடாய் வரலாம் என்பதால் கருத்தடை சாதனங்கள் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்

கருத்தடைக்கு காத்திருக்க தேவையில்லை

கருகலைப்பின் போதே கருத்தடைக்கும் முன்னேற்பாடு செய்துவிடலாம். " கருக்கலைப்பு செய்யும் மருத்துவரிடமே கருத்தடை முறை குறித்த ஆலோசனையை பெறலாம். மாத்திரையோ அல்லது வேறு கருத்தடை முறையோ முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios