Asianet News TamilAsianet News Tamil

போதையில் விபரீதம்... இடுப்பில் இருந்த கத்தியை எடுக்கும் போது படக்கூடாத இடத்தில் பட்டு உயிரே போய்விட்டது..!

 கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையால் அதிக சப்தம் வெளியில் கேட்க தொடங்கியுள்ளது. பின்னர் இவர்களை சமாதானம் செய்வதற்காக  ராகவேந்திரன் என்ற முதியவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

a man died due to mishandling the knife and injured male reproductive system
Author
Chennai, First Published Oct 12, 2019, 6:06 PM IST

போதையில் விபரீதம்...இடுப்பில் இருந்த  கத்தியை எடுக்கும் போது படக்கூடாத இடத்தில்  பட்டு உயிரே போய்விட்டது..! 

சென்னை அயனாவரத்தில் கூலித் தொழில் செய்து வரும் மனோகரன் என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சரிதா என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

பின்னர் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படும். இதன் காரணமாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியை அடிப்பதும், துன்புறுத்துவதும், தகாத வார்த்தைகளால் பேசுவதுமாக இருந்துள்ளார், இதனால் மிகவும் மனவேதனையில் இருந்த சரிதா தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்

a man died due to mishandling the knife and injured male reproductive system

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகமாக மது அருந்திவிட்டு, சரிதாவின் தாய் வீட்டிற்கே சென்று சண்டையிட்டு உள்ளார். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையால் அதிக சப்தம் வெளியில் கேட்க தொடங்கியுள்ளது. பின்னர் இவர்களை சமாதானம் செய்வதற்காக  ராகவேந்திரன் என்ற முதியவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதிக போதையில் இருந்த மனோகரன் என்ன செய்வது என்று தெரியாமல் தன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை வேகமாக எடுத்துள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக ஆணுறுப்பின் மீது பட்டு உள்ளது.

பின்னர் அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் எங்கு அடிப்பட்டது என்று கூட தெரியாமல் மீண்டும் அதே கத்தியை எடுத்து ராகவேந்திரனை தாக்கியுள்ளார். இதில் அவரும் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் இவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராகவேந்திரருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரதிடவசமாக மனோகரன்அதிக ரத்த இழப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios