Asianet News TamilAsianet News Tamil

வீசப்பட்ட சிகரெட்..! கொழுந்துவிட்டு எரிந்து நாசமா போன இருசக்கர வாகனங்கள் முதல் கோடி ரூபாய் கார் வரை..! பெங்களூரில் பரபரப்பு ..!

பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் மற்றும் 200 கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசமாயின.

200  Vehicles On Fire Near Bengaluru Air Show, Cigarette Could Be Cause
Author
Chennai, First Published Feb 23, 2019, 2:30 PM IST

வீசப்பட்ட சிகரெட்..! கொழுந்துவிட்டு எரிந்து நாசமா போன இருசக்கர வாகனங்கள் முதல் கோடி ரூபாய் கார் வரை.!

பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் மற்றும் 200 கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசமாயின.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சி அரங்கத்திற்கு வெளியே வாகன நிறுத்தத்தில் பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் இன்று மதியம் வெளியில் திடீயென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கிய தீயில் வாகனங்கள் எரிந்து நாசமாயின. 

200  Vehicles On Fire Near Bengaluru Air Show, Cigarette Could Be Cause

இதனை தொடர்ந்து காவல் திரையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.இதற்காக 10 கும் மேற்பட்ட டெண்டர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

200  Vehicles On Fire Near Bengaluru Air Show, Cigarette Could Be Cause

மேலும் இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்ட மாதிரி தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்ட பின் தொடந்து ஒரு மணி நேரத்திற்கு விமானத்தை இயக்க வில்லை. இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்டமாக, யாரோ ஒருவர் சிகரெட் பிடித்து வீசியதால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

200  Vehicles On Fire Near Bengaluru Air Show, Cigarette Could Be Cause

இருப்பினும் இது குறித்த தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் பெங்களூரு சிட்டி பெரும் பதற்றமாக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios