Asianet News TamilAsianet News Tamil

வில்லியம்சன் இல்ல.. புவனேஷ்வர் குமார் கேப்டன்!! ஆர்சிபியை அலறவிட அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் சன்ரைசர்ஸ்

சன்ரைசர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். 

surisers facing rcb with bhuvneshwar kumar captaincy and rcb won toss opt to bowl
Author
Hyderabad, First Published Mar 31, 2019, 3:52 PM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில், புள்ளி பட்டியலில் கேகேஆர் அணி முதலிடத்திலும் டெல்லி கேபிடள்ஸ் அணி இரண்டாமிடத்திலும் உள்ளன. சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகள் நான்காமிடத்தில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது வெற்றியை பெற்ற பஞ்சாப் அணி நான்காமிடத்தை பிடித்தது. 

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலுமே தோற்றுள்ள ஆர்சிபி அணி, முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இன்றைய போட்டியில் ஆடுகிறது. அதேநேரத்தில் வார்னரின் வருகையால் உத்வேகமடைந்துள்ள சன்ரைசர்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் ஆடுகிறது. 

கேகேஆர் அணியிடம் முதல் போட்டியில் தோற்ற சன்ரைசர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனால் ஆர்சிபி அணி, சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளிடமும் தோற்றது. 

சன்ரைசர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். ஆர்சிபி அணி ஒரேயொரு மாற்றத்துடன் களமிறங்குகிறது. பவுலர் சைனிக்கு பதிலாக பர்மான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

surisers facing rcb with bhuvneshwar kumar captaincy and rcb won toss opt to bowl

ஆனால் சன்ரைசர்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் வில்லியம்சனுக்கு பதிலாக ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதனால் புவனேஷ்வர் குமார் கேப்டனாக செயல்படுகிறார். நதீமிற்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் இடம்பிடித்துள்ளார். 

சன்ரைசர்ஸ் அணி:

வார்னர், பேர்ஸ்டோ, விஜய் சங்கர், மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, யூசுப் பதான், ரஷீத் கான், முகமது நபி, புவனேஷ்வர் குமார்(கேப்டன்), சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), பார்த்திவ் படேல், மொயின் அலி, டிவில்லியர்ஸ், ஹெட்மயர், கிராண்ட் ஹோம், ஷிவம் துபே, பர்மான், சாஹல், உமேஷ் யாதவ், சிராஜ். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios