Asianet News TamilAsianet News Tamil

எங்க மொத்த பேருக்கும் மரண பயத்தை காட்டிட்டாரு தல.. ஆர்சிபி கேப்டன் கோலி பீதி

முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த தோனி, அடுத்த இரண்டு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார். நான்காவது பந்தில் 2 ரன்னும் ஐந்தாவது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸரும் அடிக்க, கடைசி பந்தில் வெறும் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 

rcb captain kohli said that dhoni gave massive scare to rcb
Author
India, First Published Apr 22, 2019, 12:34 PM IST

ஐபிஎல் 12வது சீசனில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில் பார்த்திவ் படேலின் அபாரமான ரன் அவுட்டால் கடைசி பந்தில் சிஎஸ்கே அணி திரில் வெற்றி பெற்றது. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 161 ரன்கள் எடுத்தது. 162 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, பவர்பிளேயிலேயே வாட்சன், டுபிளெசிஸ், ரெய்னா, கேதர் ஆகிய 4 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. 

அதன்பின்னர் தோனியும் ராயுடுவும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறிது நேரம் ஆடினர். எனினும் மந்தமாக ஆடிய ராயுடு, 20 பந்துகளில் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனாலும் தோனி அவ்வப்போது சிக்சரும் பவுண்டரியும் அடித்து தோல்வியை நெருங்கிவிடாமல் பார்த்துக்கொண்டார். 

rcb captain kohli said that dhoni gave massive scare to rcb

ஜடேஜா 17வது ஓவரிலும் பிராவோ 19வது ஓவரிலும் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த தோனி, அடுத்த இரண்டு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார். நான்காவது பந்தில் 2 ரன்னும் ஐந்தாவது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸரும் அடிக்க, கடைசி பந்தில் வெறும் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த பந்தை தோனி அடிக்காமல் விட, எனினும் ஒரு ரன் ஓடினர். ஆனால் ஆர்சிபி விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் அந்த பந்தை பிடித்து பேட்டிங் முனையை நோக்கி ஓடிவந்த ஷர்துல் தாகூரை ரன் அவுட் செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

rcb captain kohli said that dhoni gave massive scare to rcb

போட்டிக்கு பின் பேசிய ஆர்சிபி கேப்டன் கோலி, பார்த்திவ் படேலும் டிவில்லியர்ஸும் பேட்டிங் ஆடியபோது 175 ரன்கள் அடித்தால் போதும் என்று நினைத்தோம். ஆனால் இந்த ஆடுகளத்திற்கு தேவையான ரன்னைவிட 15 ரன்கள் குறைவாகவே அடித்தோம். 19 ஓவர்கள் வரை போட்டி எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. கடைசி ஓவரில் தோனி அதிரடியாக ஆடி எங்களுக்கு மரண பயத்தை காட்டிவிட்டார் என்று பீதியில் பேசினார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios