Asianet News TamilAsianet News Tamil

ஹர்பஜன், இம்ரான் தாஹிர் அசத்தல் பவுலிங்.. வெறும் 70 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆர்சிபி!!

ஐபிஎல் 12வது சீசன் இன்று தொடங்கியது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது.
 

rcb all out for just 70 runs and very easy target for csk in first match
Author
Chennai, First Published Mar 23, 2019, 9:32 PM IST

ஐபிஎல் 12வது சீசன் இன்று தொடங்கியது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது.

முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்தார்.

ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலியும் பார்த்திவ் படேலும் களமிறங்கினர். தொடக்கம் முதலே சிஎஸ்கே பவுலர்கள் ஆர்சிபி அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். முதல் ஓவரை தீபக் சாஹர் அருமையாக வீசினார். இதையடுத்து இரண்டாவது ஓவரிலேயே சீனியர் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கை பந்துவீச வைத்தார் தோனி. ஹர்பஜனும் நன்றாக வீசினார். மீண்டும் தீபக் சாஹர் வீசிய 3வது ஓவரில் கோலியை ரன் எடுக்கவிடாமல் தடுக்க, அழுத்தம் அதிகரித்தது.

ரன் எடுக்காத அழுத்தத்தில் ஹர்பஜன் வீசிய 4வது ஓவரில் கோலி தூக்கி அடிக்க, ஜடேஜா அதை கேட்ச் பிடித்தார். கோலி வெறும் 6 ரன்களில் வெளியேற, அதன்பிறகு மொயின் அலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரையுமே தலா 9 ரன்களில் ஹர்பஜன் சிங் அவுட்டாக்கினார். கோலி, டிவில்லியர்ஸ் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் உட்பட மொத்தம் 3 விக்கெட்டுகளை மிரட்டினார் ஹர்பஜன் சிங்.

இதையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் இளம் அதிரடி வீரர் ஹெட்மயர் களத்திற்கு வந்தார். இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ரன்னே எடுக்காமல் ரெய்னாவால் ரன் அவுட்டாக்கப்பட்டு பெவிலியன் திரும்பினார். 

rcb all out for just 70 runs and very easy target for csk in first match

ஹெட்மயரை போலவே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு வீரர் ஷிவம் துபே. மும்பையை சேர்ந்த இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இவரை வெறும் 2 ரன்னில் இம்ரான் தாஹிர் தனது சுழலில் வீழ்த்தினார். கோலின் டி கிராண்ட் ஹோமை ஜடேஜா வீழ்த்தினார். நவ்தீப் சைனி, சாஹல் ஆகியோரை தாஹிர் வீழ்த்த, உமேஷ் யாதவை ஜடேஜா போல்டாக்கி அனுப்பினார். ஆர்சிபி அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமனையில் பார்த்திவ் படேல் மட்டும் நிலைத்து நின்றார். ஆனாலும் அவரால் எந்த பயனும் இல்லை. கடைசி விக்கெட்டாக பார்த்திவ் படேலை பிராவோ வீழ்த்தினார். 17.1 ஓவரில் வெறும் 70 ரன்னுக்கு ஆர்சிபி அணி ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக பார்த்திவ் படேல் 29 ரன்களை அடித்தார். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். சிஎஸ்கே அணி சார்பில் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் பிராவோ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

ஆர்சிபி அணி வெறும் 70 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, சிஎஸ்ஏ அணிக்கு மிக மிக எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios