Asianet News TamilAsianet News Tamil

தாறுமாறா அடிக்கும் அதிரடி வீரர்களை கொண்ட பஞ்சாப் அணி!! ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்ளும் உத்தேச பஞ்சாப் அணி

இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத பஞ்சாப் அணி, கடந்த சீசனில் அஷ்வின் தலைமையில் அபாரமாக ஆடியது. முதல் சில போட்டிகளில் சிறப்பாக ஆடிய அந்த அணி, லீக் சுற்றின் இரண்டாம் பாதியில் சொதப்பியதால் தொடர் தோல்விகளை தழுவி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. 
 

probable eleven of punjab team is going to play against rajasthan royals
Author
Jaipur, First Published Mar 25, 2019, 3:52 PM IST

ஐபிஎல் 12வது சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்துவருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில், ஆர்சிபியை வீழ்த்தி சிஎஸ்கே அணியும், சன்ரைசர்ஸை வீழ்த்தி கொல்கத்தா அணியும், மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி டெல்லி கேபிடள்ஸும் வெற்றி பெற்றுள்ளன. 

நான்காவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே இன்று நடக்கிறது. ராஜஸ்தான் கேப்டன் ரஹானே மற்றும் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் ஆகிய இருவருமே உலக கோப்பை அணியில் இடம்பெறும் முனைப்பில் உள்ளனர். இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன.

இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத பஞ்சாப் அணி, கடந்த சீசனில் அஷ்வின் தலைமையில் அபாரமாக ஆடியது. முதல் சில போட்டிகளில் சிறப்பாக ஆடிய அந்த அணி, லீக் சுற்றின் இரண்டாம் பாதியில் சொதப்பியதால் தொடர் தோல்விகளை தழுவி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. 

இம்முறை கோப்பையை வெல்லும் தீவிரத்தில் உள்ளது. அஷ்வின் தலைமையிலான அணியில் ராகுல், கெய்ல் ஆகிய அதிரடி வீரர்கள் ஏற்கனவே உள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் அதிரடி வீரர் நிகோலஸ் பூரானை அந்த அணி எடுத்துள்ளது. இன்றைய போட்டியில் கெய்ல், பூரான், சாம் கரன், முஜீபுர் ரஹ்மான் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் களமிறங்க வாய்ப்புள்ளது. 

probable eleven of punjab team is going to play against rajasthan royals

இவர்களில் கெய்லும் பூரானும் தாறுமாறாக அடிக்கக்கூடிய அதிரடி வீரர்கள். இங்கிலாந்து வீரர் சாம் கரன் சிறந்த ஆல்ரவுண்டர். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக ஆடியது நாம் அறிந்ததே. எனவே அவரும் ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்சை தருவார். முஜீபுர் ரஹ்மான் அந்த அணியின் கோர் வீரர். இவர்கள் நால்வரும் வெளிநாட்டு வீரர்களாக இருப்பர். 

ராகுல், மயன்க் அகர்வால், கருண் நாயர் ஆகிய மூன்று கர்நாடகாவை சேர்ந்த வீரர்களும் இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு மிகவும் உதவிகரமாக இருப்பர். இவர்கள் மூவருமே அணியில் இருப்பர். மேலும் அதிகபட்ச தொகை கொடுத்து அந்த அணி ஏலத்தில் எடுத்த தமிழக மாயாஜால ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியும் இந்த போட்டியில் ஆடுவார். வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமியும் அங்கித் ராஜ்பூத்தும் இருப்பர். 

உத்தேச பஞ்சாப் அணி:

கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரான், மயன்க் அகர்வால், கருண் நாயர், சாம் கரண், அஷ்வின்(கேப்டன்), வருண் சக்கரவர்த்தி, முஜீபுர் ரஹ்மான், முகமது ஷமி, ராஜ்பூத். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios